பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் 349.

தொகை நூல்களிற் காணப்படுவது. கண்ணுக்குத் தோன்றி உடன் மறைவ தொன்றைக் கண்மாயம் என உலகியலிற் கூறுவதுண்டு. இதனே அடிகள் இலக்கிய நெறியில் முதன்முதலாக, கண்டுங் கண்டிலேன் என்ன கண்மாயமே ' என்று வழங்குகின்ருர்.

இனி, திருநாவுக்கரசர், வழக்கிலா அமணர்தந்த நஞ்சு அமுதாக்குவித்தார் நனிபள்ளி யடிகளாரே' என்று பாடி ஞராக, திருவாதவூரடிகள், ' நஞ்சமே அமுதமாக்கும் நம்பி ரான்' என்று அச்சொற்ருெடரின் சொல்லேயும் பொரு 'அளயும் மேற்கொண்டுரைக்கின்ருர். இவ்வாறே, பற்றுக

பற்றற்ருன்பற்றினே அப்பற்றைப் பற்றுகபற்றுவிடற்கு" என்ற திருக்குறளே, பற்ருங்கு அவையற்றிர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி நற்ரும் கதி அடைவோமெனில் கெடுவீர் ஓடி வம்மின் ' என்றும், யான் எனது என் னும் செருக்கு ' என்ற திருக்குறளடியை, "நான் என தென்னும் மாயம் ' என்றும் கூறுவன அடிகளின் பரந்த கல்வி நலத்தைப் புலப்படுப்பனவாம்.

இனி, திருவாதவூரடிகள் இளங்குழந்தைகளின் இனிய கூட்டுறவில் த்ோய்ந்து பேரின்பம் நுகர்ந்தவராகக் காணப் படுகின்ருர், பச்சிளங் குழவிகள் உறக்கம் வரினும் பசி யெடுக்கினும் அழும் அவற்றின் அழுகைக் குறிப்பறிந்து பாலூட்டிச் செய்வனசெய்வது தாயரின் தாய்மைச்செயல். அத்ன எடுத்தோது முகத்தால் இறைவன் உயிர்கள்பால் தாயன்புசெய்து தலையளிக்கின்ருன் என்பாராய், பால் கினைந்துTட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியே னுடைய ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே' என்பர் ; தாய்ப்பால் குறைந்த குழவி சவலே.

1. திருச்சதக. 42. 2. திருநா. 70 : 5. 3. அச்சப். 9. 4. குறள். 350. 5. கற்று நல்லது. 6. உயிருண்ணி. 5. 7. குறள். 346. 8. அற்புதப். 3. 9.

பிடித்த. 9.