பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சைவ இலக்கிய வரலாறு

கடிகைகள் வாயிலாகவன்றித் தனித்த நிலையில், வட மொழிப் புலமை மிக்குப் பிறர்க்கு அதனைக் கற்பித்தொழுகிய வேதியர்களுக்குப் பிரமதாயம் வழங்கி வட மொழியின் வளர்ச்சியினைப் பல்லவர்கள் பெரிதும் ஊக்கியுள்ளனர். கெளடிலியன் எழுதிய பொருணூலும், வேதம் வல்ல வேதியர்கட்கு நன்கு விளைந்து பெரும் பயன் தரக் கூடிய நிலங்களைத் தேர்ந்து இறையிலி பிரமதாயமாகவேந்தர்கள் வழங்க வேண்டுமெனக் கூறுகிறது.

இப்பல்லவர்கள் மேற்கொண்ட இந்த நெறியையே இடைக்காலச் சோழவல்லரசர்களும் பின்பற்றி வடமொழிவாணர்கட்குப்[1] பட்டவிருத்தியென்ற பெயரால்[2] நிலங்களும் ஊர்களும் இறையிலியாக வழங்கினர். பல்லவருள் இரண்டாம் விஜயகந்தவன்மன் என்பான் காசிப கோத்திரத்துக் கோலசருமன் என்பவன் இரண்டு வேதமும் ஆறங்கமும் கற்றவன் என்பதுபற்றிச் சாத்துவிகவிருத்தி என்னும் பெயரால் ஓங்கோடு என்றவூரைக் கொடுத்திருக்கின்றான். நான்கு வேதமும் ஆறங்கமும் வல்ல ஜேஷ்டபாத சோமயாஜிக்குக் கொடுகொல்லியென்ற வூரைக் கொடுத்தசெய்தியைக்[3] காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது; பல்லவவேந்தர்கள், வடமொழி வல்ல பிராமணர்களைக் கொணர்ந்து குடியேற்றி, நிலமும் வீடும் இறையிலியாகக் கொடுத்து அக்கிரகாரங்கள்[4] ஏற்படுத்தி வடமொழியைப் பரவச்செய்துள்ளனர், தலகுண்டாவென வழங்கும் ஸ்தானு குண்டூரில் முப்பத்திரண்டு வேதியர் குடும்பங்களைக் குடியேற்றி மக்களுக்குக் கல்வி கற்பிக்கச் செய்தனர். இரண்டாம் நந்திவன்மன், கும்பகோணத்துக்கருகிலும் நாகைப்பட்டினப் பகுதியிலும், இரண்டு வடமொழிவல்ல அக்கிரகாரங்களை ஏற்படுத்தினான். தண்டந்தோட்டச் செப்பேடுகள், அதற்கு மேற்கிலுள்ள ஊரைத் தயாமுக மங்கல-


  1. 1.S. I. Ins. Vo!. III. No. 200 & 223.
  2. 2 Ep. Ind. Vol. XV. p. 251.
  3. 3 S. I. 1.vol11 p iii p 358-359.
  4. 4 Ep. Ind. Vol. III. p. 130-4; Ibid. Vol. IV. p. 170.