பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 சைவ இலக்கிய வரலாறு

வித்து எதிர்வது எப்போது பயில்வி கயிலைப் பரம்பரனே! என்றும் உடம்பிற்குப் புளியம்பழத்தை உவமையாக கிறுத்தி, அளியுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியே னுடையாக்கை புளியம் பழமொத்திருந்தேன்' என்றும், நீரோட்டத்தில் எளிதில் கரைந்துருகி யோடும் நொப்ம் மணலைத் தனது உள்ளத்துக்கு உவமமாக்கி, சிவன் எம் பெருமான் என்று ஏத்தி, ஊற்று மணல்போல் நெக்கு ருெக்கு உள்ளே யுருகி ஒலமிட்டுப் ப்ோற்றி நிற்பது என்று கொல்லோ ' என்றும் கூறுகின்ருர்,

நாயைச் சிவிகை யேற்றுவித்தாற் போல என்றும், நாயின்மேல் தவிசிட்டாற் போல என்றும் நாப்பொருளாக இருபழமொழிகள் வழங்குவதுண்டு. உயர்ந்தோரை ஏற்று தற்குரிய சிவிகையில் நாயை ஏற்றினும் அது தனக்குரிய கீழ் நிலையையே விழைந்தோடும் என்பதும், குதிரை யானே முதலியவற்றின் மேல் பண்ணப்படும் தவிசினே நாயினது முதுகின்மேல் வைப்பது பொருந்தாது என்பதும் இவற் றின் கருத்து. இவ்விருகருத்தும் தோன்ற, "நன்ருக வைத்து என்னை நாய் சிவிகை யேற்று வித்த...பெருமான்' என் றும், "அடியேன் இறுமாக்க காய் மேல் தவிசிட்டு நன்ருப் பொருட்படுத்த தீமேனியான்' என்றும் பன்முறையிற் கூறுகின்ருர். இதனேக் கண்டே திருத்தக்கதேவர், அடு களிற்று எருத்தினிட்ட வண்ணப் பூந்தவிசுதன்னை ஞமலி மேல் இட்டதொக்கும்' என்று தாமும் எடுத்தாளுகின்ருர். கன்றின்ற பசு தன் கன்றின்பால் பேராக்காதல் கொண்டு பேணும் இயல்புடையது: அக்கன்று சிறிது முதிர்ந்த வழித் தாய்ப்பசு அதனை உதைத்துத் தள்ளும் ; அப்போது அக்கன்று பால் வேட்கை பெரிதுற்று உள்ளம் வெதும்பி வாடும்; அவ்வாறு தானும் மூத்து நோயுற்று அருள்வேட்கை மிகுந்து வருந்தும் இயல்பை, 'நோயுற்று

1. நீத்தல். 34. 2. ஆசைப். 5. 3. புணர்ச்சிப். 2. 4. பழமொழி. 105. 5. கோத்தும். 8. 6. கோத்தும். 20. 7.

சீவக. 202.

2