பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 சைவ இலக்கிய வரலாறு

அருள் புரிந்தனே புரிதலும் களித்துத் தலையில்ை நடந் தேன்' என்றும் கூறுவர்.

திருநீறணியும் திறம் தூளம் முண்டம் என இருவகைப் படும் , துரளம் வெறிதே பூசுவது. முண்டம் நீர் பெய்து குழைத்திடுவது. இவற்றுள் தூளம் உத்துள்ளனம் எனவும் முண்டம் திரிபுண்டரம் எனவும் வடமொழிப்படுத்து வழங்கும். இவ்விரு திறத்தையும், திருமுண்டம் தீண்ட மாட்டாது அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே" என்றும் 'திருநீற்றை உத்துரளித்து ஒளிமிளிரும் வெண்மையனே' என்றும் அடிகள் பாடுகின்ருர். . இனி, படுநுகம் பூணுய் பகடே மன்னர், அடித்தளே நீக்கும் வெள்ளணியா மெனும், தொடுப்பே ருழவர் ஒதைப் பாணியும் ' என்ற சிலப்பதிகாரத் தொடர்க்கு அரும்பத வுரைகாரர், 'தொடுப்பேருழவர்-விளாக் கொண்டு உழும் உழவர்' என்று பொருள் காட்டுவர். இதல்ை விளா என்பது உழவெல்லேயைக் குறிக்கும் ஒரு சொல்லென்பது விளங்கும். இதனை அடிகள், ' நுண்ணிய நொடியென சொற் செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி, முன் செய்த பொய்யறத் துகளறுத்து எழுதரு சுடர்ச்சோதி' என்று கூறுகின்ருர் சொற் செய்து அது கொண்டு சொல் லேருழவு செய்யுமாறு செலுத்திய அருட்டிறத்தை நுக மின்றி விளாக் கைத்து' என்றும், பின்பு அந்நிலையி னின்றும் எடுத்துத் துகளறுத்தார் என்றற்குத் "தூக்கி... துகளறுத்து எழுதரு சுடர்ச்சோதி' என்றும் கூறு கின்ருர். இவ்வாறு கைத்துத் தூக்கும் சொற்ருெடர் நயத்தைத் திருத்தக்க தேவர், "அடிச் சிலம்பிரங்கும் இன் குரல், கைத்தெடுத்தலின் காமம் தாழ்த்தது' என்று பாடு கின்ருர்,

ஆடிப்பாவை, மண்புனே பாவை, மரப்பாவை யென்பன வற்றைப் பண்டைச் சங்கத் தொகைநூல்களிலும் திருக்

1. செத்தி. 3. 2. அச்சப். 9. 3. நீத்தல். 22. 4. அதிய. 8. 5. சீவக. 2633.