பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு வரலாறு

27

மெனப் பெயரிட்டுத் தயாமுகனென்னும் வேதியனொருவன் வேண்டுகோட்படி மூன்று வேதமும் மிருதிகளும் வல்ல வேதியர் முந்நூற்றியெண்மருக்கு வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றன.

கோயில்களை, வேதமும் வைதிக புராண வரலாறுகளும் விளங்கும் இடங்களாக்கிய முதன்மைப் பணி, பல்லவர் காலத்தில்தான் சிறந்த இடம்பெறுவதாயிற்று. வேதம் ஓதுதற்கென்றே கோயில்களில் கட்டளைகள் (நிவந்தங்கள்) ஏற்படுத்தப்பட்டன. கூரத்துச் செப்பேடுகள்[1] அவ்வூரி லுள்ள வித்தியாவினீத பல்லவேச்சுரத்தில் மகாபார தத்தை மண்டபத்தில் வைத்துச் சொல்லுமாறு ஏற்பாடு செய்ததாகக் கூறுகின்றன.[2] தண்டந்தோட்டச் செப்பேடுகளிலும் இச்செய்தி காணப்படுகிறது. பாரதத்தைச் சொல்லும் மண்டபத்துக்குத் தண்ணீராட்டுவோரும் (அம்பலந் தண்ணீராட்டுவார்) தீவட்டி நிறுவித் தீயெரிப்பாரும் ஏற்படுத்தி யிருந்தனர். பாகூரில் நிருபதுங்கவன்மனால் ஒரு வடமொழிக் கல்லூரி ஆதரவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லாரி கி. பி. எட்டாம் நாற்றாண்டிலே தோன்றியிருக்க வேண்டுமென அறிஞர் கருகின்றனர். இப் பாகூர்க் கல்லூரிக்கு ஊர்கள் பிரமதாயகமாக விடப்பட் டிருப்பது நோக்கின்,[3] இது பிராமணர்கட்கென்றே ஏற்பட்டிருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது. பல்லவர்கள் காலத்தில், வடமொழிக் கல்வி, மேலே கூறிய கோயில்களாலும் கடிகைகளாலும் ஆக்கமும் ஊக்கமும் பெற்றுச் சிறந்தாற்போல, மடங்கள் வாயிலாகவும் வளம்பெற்றுத் திகழ்ந்தது. மடம் என்பது கற்றவர்களும் பிறரும் இருக்குமிடம் என வடமொழி அமரகோசம் கூறுகிறது. கி. பி. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே இம்மடங்கள் தென்னாட்டில் தோன்றியுள்ளன.

தென்னாட்டு மடங்கள் மட்டில் தொடக்கத்தில் காணார்


  1. 1. S. I, Ins. Vol. I. p. 151.
  2. 2. S. I. Ins. Vol. II. p.v.
  3. 3. Ep. Indi. Vol. XVIII. p. ii; S: I. I. Vpl. II. p. v. p. 516.