பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

சைவ இலக்கிய வரலாறு

அன்றே கயிலாயத்துக்குச் செல்வன் என்றும், அவர் சென்றவுடன் அன்றே திருமால் போந்து ஐந்து நாள் தங்குவன் என்றும் சயாமியர் உரைக்கின்றனர். மேலும், சிவபெருமான் விளையாட்டு விருப்பினன் எனவும், அவன் தங்கியிருக்கும் கால முற்றும் அவன் திருமுன் திருவூசல் முதலிய இன்ப விளையாட்டுக்களை மக்கள் செய்தல் வேண்டும் என்றும், திருமால் அமைதி விருப்பன் என்று கொண்டு அவன் தங்கியிருக்கும் நாட்கள் ஐந்தினும் இரவில் அவனது திருக்கோயிலில் மந்திரச் சடங்குகளால் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இயம்புகின்றார்கள். சிவபெருமான் எழுந்தருளும் நாளாகிய ஏழாம் நாளில் பிராமணர் தலைவன் விடியற் காலத்தே எழுந்து ஒதுவன் : பின்பு சிவன் தங்குதற்கென அமைக்கப்பட்ட சாலைக்குச் சென்று அவனை வரவேற்பன். அன்றிரவு சிவன் கோயிலில் பிராமணர்கள் கூடியிருப்பர் ; அவர்களில் தலைவனாவான் சென்று கிரகசுத்தி ஆத்ம சுத்தி என்ற இரு சடங்குகளைச் செய்வன். அதன்பின்பிராமணர் நால்வருக்குப் பூத நீர் தெளித்துச் சுத்தி" செய்வன்; அவர்கள் நால்வரும் தானியமணிகளும் பலவகைப் பழங்களும் பரப்பிய விசிப் பலகை (மேஜை) ஒன்றின் அருகே சென்று ஒருவர் பின் ஒருவராக நின்று தலைக்கொன்றாக நால்வரும் நான்கு மங்திரங்களை ஒதுவர். பின்னர், நால்வரும் சேர்ந்து லோரி'பாவாய் ' எனப்படும் திருவெம்பாவையை ஒதுவர். ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் மற்றைய பிராமணர்கள் சங்குகளை முழக்குவர். தேய்பிறைப் பக்கத்து முதல் நாளன்று, வளர்பிறைப் பக்கத்து ஏழாநாட் செய்தது. போலவே பற்பல சடங்குகளைச் செய்து அன்றிரவு திரு.மால் கோயிலுக்குச் சென்று திருவெம்பாவை திருப்பாவையை ஒதுவர்.'[1]

இனி, தெள்ளேணம் என்பது மகளிர் விளையாடும்.விளாபாட்டு வகை. மகளிர் சிலர் கைகோத்து வட்டமாக நின்று இடமும் வலமும் சாய்ந்து குதித்துக் கைகொட்டியாடும்


  1. 1. Ibid. p. 238-51.