பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

363.


விளையாட்டென்றும், அக்காலத்தே அவர்கள் பாடும் பாட்டுத் தெள்ளேணப் பாட்டு என்றும், கூறுகின்றனர். இதன் செயல் முறை இனிது விளங்கவில்லே. ஆயினும், இப்பாட்டுக்கள் தென்ன தென்ன என்ற சந்தக் குழிப் புடையவை யென்பது " மின்னேர் நுடங்கிடைச் செந்துவர் வாய் வெண்ணகையீர், தென்னா தென்னாவென்று தெள்ளேணம் கொட்டாமோ[1] ' என்றும், ' கண்ணார வந்து நின்றான் கருணைக் கழல் பாடித், தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ”[2] என்றும் வாதவூர் அடிகள் கூறுவதால் அறிகின்றோம். தோணோக்கம் என்பது ஐவரும் எழுவரும் ஒன்பதின்மருமாக மகளிர் நின்று இடமும் வலமும் திரும்பித் துள்ளிக் கைகொட்டிச் சுழன்றாடும் கூத்துவகை யென்பர். ' குன்றாத சீர்த்தில்லை யம்பலவன் குணம் பரவித், துன்றார் குழலினிர் தோனோக்கம் ஆடாமோ [3]' என அடிகள் கூறுகின்றார், உந்தீ பறத்தல் என்பது இந்நாளில் மகளிர் தும்பி பறத்தல் என்று. வழங்குகின்றனர். இ.து இப்போது மகளிரால் விளையாடப் பெறுகிறது.

திருச்சாழல் என்பதும் மகளிர் விளையாட்டு வகையுள் ஒன்றாகும். அறுவருக்குக் குறையாமலும் பன்னிருவர்க்கு. மேற்படாமலும் மகளிர் கூடி, இருபிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் வினாவொன்றை யெழுப்ப, மறு பிரிவினர் அதற்கு விடையிறுத்து விளையாடுவர். அவர்கள் தம்மிற். கைகோத்து நிற்குங்கால் வினாவுவோரும் விடை கூறுவோரும் தம்மை யடுத்தடுத்து நேர் நின்று கைகொட்டி விளையாடுப என்பர். பண்டை நாளை வரிக்கூத்து வகையுள் பல்வரிக் கூத்து என்னும் பகுதியிற் காணப்படும் கூத்துக்களுள் இச்சாழலும் ஒன்று நல்லார் தம் தோள் வீச்சு நற்சாழல்-அல்லாத, உந்தி அவலிடி, ஊராளி யோகினிச்சி என்பன முதலியன "கோத்தவரிக் கூத்தின்


  1. 1. திருத்தெள்ளே.
  2. 2. ஷ 19.
  3. 3. தோளுேக்கம். 2.