பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

சைவ இலக்கிய வரலாறு

 குலம்'[1] என அடியார்க்கு நல்லார் காட்டும் மேற்கோள் நூற்பா கூறுகிறது. இதன்கண், சாழல் என்பது நற்சாழல் எனக் குறிக்கப்படுவதே இதன் ஏற்றத்துக்குச் சான்று பகர்கின்றது. இந் நூற்பாவில் தோள் வீச்சு என்றது தோணோக்க மாடுவதையும், உந்தியென்றது உங்தீ பறத்தலையும் குறிக்கும். இந் "நற்சாழலின் நன்மையையுணர்ந்த நம்முன்னர் கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டில் விக்கிரம சோழன் காலத்தில் தென்னார்க்காடு விட்டத்து எலவானாசூர் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலில் இத் திருச்சாழலை ஒதுதற்கு ஏற்பாடு[2] செய்துள்ளனர். இவ்வாறே, பூவல்லி கொய்தல், அம்மானை முத லியனவும், மகளிர் பூக்கொய்தும் கழற்காய் கொண்டும் விளையாடும் விளையாட்டுக்களைக் குறித்தனவாகும். ' அத்தியுரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான், பித்த வடிவு கொண்டு இவ்வுலகிற் பிள்ளையுமாம், முத்தி முழு முதல் உத்தரகோச மங்கை வள்ளல், புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ[3] என்பது திருப்பூவல்லியிற் காணப்படும் பாட்டுக்களுள் ஒன்று. இதன்கண் வரும் பெருந்துறையான், பிள்ளையெனவரும் சொற்களைக் கொண்டு, திருவாதவூரடிகட்குப் பெருந்துறைப் பிள்ளையென்ற பெயரும் உண்டாகியிருந்தது. பட்டினத்தடிகள் 'திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளை '[4] என்பது ஈண்டுக் கருதத் தக்கது.

இனி, கோத்தும்பி, குயிற்பத்து, அன்னைப்பத்து என்பன அகப்பொருள் நெறியிற் பாடப்படும் பாட்டு வகை. பூத்தொறும் சென்று தேனுண்டு பாடும் தும்பியைக் காணும் நங்கையொருத்தி பிரிந்திருக்கும் தன் காதலன்பால் சென்று தன்பொருட்டு ஊதுமாறு வேண்டிப்பாடுவது இப்பாட்டு. இதன்கண் தினைத்தனையுள்ளதோர் பூவி


  1. 1. சிலப். 3 13. அடியாற். மேற்.
  2. 2. A. R. for 1907. para 40; A. R. No. 165 of 1906.
  3. 3. திருப்பூவல்லி, 19.
  4. 4. பட்டினத்தார் : திருவிடை. மும் மணிக். 28 :31.