பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 சைவ இலக்கிய வரலாறு

திருக்கோயில்களில் எழுந்தருள்விப்பது வழக்கமாக இருக்கிறது. திருவாதவூரர் திருவுருவைத் திருக்கோயில் களில் எழுந்தருள்விக்கும் வழக்கம் ஞானசம்பந்தர் முதலி யோரது திருவுருவங்களே எழுந்தருள்விக்கும் மரபுக்குக் காலத்தாற் பிற்பட்டதென்பது தெளிய உணர வேண்டிய தொன்று. இதுகாறும் வெளியாகியிருக்கும் கல்வெட்டுக்க ளால், திருவாதவூரர் திருவுருவத்தைக் கி. பி. பதினேராம் நூற்ருண்டில் திருவொற்றியூரில் எழுந்தருள்வித்திருப்பது

தான் மிக்க பழமையாகவுளது. பின்னர், கி. பி. 1135-ல் எலவானுசூரிலும், 1158-ல் திருவலஞ்சுழியிலும், 1170-ல் வழுவூரிலும், 1181-ல் திருக்கழுக்குன்றத்திலும், 1220-ல் மருதா நல்லூரிலும், 1229-ல் திருவீழி மிழலையிலும்,7 1231-ல் திருவாதவூரிலும், 1306-ல் சன்னவனத்திலும்,9 தோன்றிய கல்வெட்டுக்களால் திருவாதவூரர் திருவுருவங் கள் ஆங்காங்கு எழுந்தருள்வித்தமை தெரிகிறது. இவை .யன்றி, சிவகங்கை வட்டத்திலுள்ள திருமலே,19தென்னுர்க் காடுவட்டத்துத் திருவரத்துறை புதுக்கோட்டைச் சீமை யிலுள்ள பூவாலேக்குடி' கோவிலூர் விராலிமலே முத லிய இடங்களிலும் தஞ்சைமா நாட்டுத் திருக்கோடிகா19 எட்டியத்தளி 19 முதலிய இடங்களிலும், இராமநாதபுர நாட்டுத் திருப்புத்துரரிலும் திருநெல்வேலி மாவட்டத்து நாங்குனேரியிலும் திருவாதவூரரது திருவுருவங்கள் எழுந்தருள்விக்கப் பெற்றுள்ளன. இவர் திருவுருவங்கள்

1. A. R. for 1926-7. para 26. 2. A. R. No. 165 of 1906. 3. A. R. No. 628 of 1902. 4. A. R. No. 421 of 1912. .5. A. R. No. 186 of 1932-3. 6. A. R. No. 285 of 1927.

7. A. R. No. 409 of 1908. 8. S. I. I. Vol. 8. No. 423. 9. A. R. No. 30 of 1916, 10. A. R. No. 39 of 1923-4. 11, A. R. No. 228 of 1928-9. 12. P. S. No. 803. 13, P. S. No. 806. 14. P. S. No. 899. 15. A. R. No. 54 of 1930–31. 16. A. R. No. 130 of 1916. 17. A. R. No. 175 of 1935-6. 18. A. R. for 1927-8. para 19.