பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

367

கொழும்புப் பொருட்காட்சிச் சாலையிலும் சென்னைப் பொருட்காட்சிச் சாலையிலும்[1] உள்ளன.

இக் கல்வெட்டுக்கள் திருவாதவூராளி என்றும், திருவாதவூர்த் தேவர் என்றும், திருவாதவூர் நாயனார் என்றும் திருவாதவூர்ப்பெருமாள் என்றும் திருப்பெருந்துறை யாளுடையார் என்றும் திருவாதவூர்த் தம்பிரானார் என்றும் திருவாதவூரடிகளைக் குறிக்கின்றன. பின் வந்த பட்டினத்தடிகள், பெருந்துறைப் பிள்ளையெனவும், நம்பியாண்டார் நம்பிகள், திருவாதவூர்ச் சிவபாத்தியன்[2] என்றும் குறித்துள்ளனர்.

இனி, இறுதியாக ஒன்றுகூறி இப்பகுதியை முடிப்பாம். திருத்தொண்டத் தொகைபாடிய சிறப்பால் நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையான் என்ற பெயரெய்தியது போலத் திருவாசகம் பாடிய நலத்தால் திருவாதவூரர்க்கு திருவாசகன் என்ற பெயரும் உண்டாகியிருக்கிறது. நம்பியாரூரர் பெயரால் உண்டாகிய மடங்கள் திருத்தொண்டத் தொகையான் மடம் என வழங்கியது போலவே, திருவாதவூரர் பெயரால் உண்டாகிய மடங்கள் திருவாசகன்மடம்[3] என வழங்கின. அன்றியும், திருவாசகத்தில் “வாக்குன் மணிவார்த்தைக் காக்கி”[4] என்றும், “பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை”[5] என்றும் அடிகள் கூறியது பற்றி அடிகள் மாணிக்கவாசக ரென்றும் வழங்கப் பெற்றமை தோன்றக் கும்பகோணத்து நாகேஸ்வரசுவாமி கோயில் கல்வெட்டொன்று “கூத்தாடும் திருஞான சம்பந்தன் மாணிக்கவாசகன்”[6] என்ற ஒருவனையும், திரு-








  1. இது 1933-ஆம் ஆண்டில் தஞ்சை ஜில்லா மதுக்கூரில் கண்டெடுக்கப் பெற்றுச் சென்னைப் பொருட்காட்சிச் சாலைக்குக் கொணரப்பெற்றது; இது விக்கிரம் கிராமத்துத் தியாகராச சுவாமி கோயிலுக்கு உரியது என்றும் கூறுவர்.
  2. நம்பியாண்டார்: கோயில் திருப்பண்ணியர். 58.
  3. A. R. No. 282 of 1915.
  4. திருச்சதக. 26.
  5. பண்டாய. 7.
  6. A. R. No. 258 of 1911.