பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

சைவ இலக்கிய வரலாறு

வொற்றியூர்க் கல்வெட்டொன்று “பெரியன் மாணிக்கவாசகன்”[1] என்று ஒருவனையும் குறிக்கின்றன. எவ்வகையால் நோக்கினும் திருவாதவூர் அடிகட்கு மாணிக்கவாசகர் என வழங்கும் பெயர் மிகவும் பிற்காலத்தது என்பது நன்கு விளங்குகிறது. அன்றியும், இன்று காறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் திருவாதவூரடிகளைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில்தான் பெரும்பான்மையாய் உள்ளன.



  1. A. R. No. 107 of 1902.