பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்துப் பிள்ளையார்

37I



தாற் கூறியதை வாய்மையாகக் கொண்டு, சேந்தனார் அவரது செல்வத்தை மக்களுக்கு வழங்கியது.குற்றமெனக் கருதிச் சேந்தனாரைச் சிறையிலிட்டான். ஒருநாள் அரசனே பட்டினத்து அடிகளிடம் நேராக வந்தான். அடிகள் ஓரிடத்தில் நிட்டை கூடியிருந்தார். வேந்தன், அவர் நிட்டை கலைந்தவுடன் துறவு பூண்டதற்குக் காரணம் வினவினான். அடிகள், நிலை பெயராமல் இருந்தபடியே, " நீர் நிற்க யாம் இருக்க' என்று முறுவலித்து உரைத்தார். அவரது துறவுச் சிறப்புணர்ந்து வேந்தன் அவரை வணங்கிவிட்டுச் 'சேந்தனாரையும் சிறை வீடுசெய்யப் பணித்தான். பின்பு சேந்தனார் அடிகள் ஆணையிட்ட வண்ணம் தில்லை நகர் அடைந்து சிவத்தொண்டு புரிந்து வருவாராயினர்.

பின்னர், அடிகள் திருவிடை மருதூரடைந்து பன்னாள் தங்கி இறைவனை வணங்கி வந்தார். அவ்வாறு வரும் நாளில்தான் அவர் திருவிடைமருதுரர் மும்மணிக்கோவை என்ற நூலைச் செய்தருளினார். அதன்பின், அவர் திருவாரூர் முதலிய திருப்பதிகளை வணங்கிக்கொண்டு சீர்காழி வந்து சேர்ந்தார். அது திருஞான சம்பந்தர் தந்தையொடு போந்து ஞானம்பெற்ற பதியாதல் கண்டு சில நாட்கள் தங்கினார். அப்போது, அடிகள், திருக்கழுமல மும்மணிக்கோவை பாடினார். அவ்விடத்தின் நீங்கித் தில்லைக்குச் சென்று கூத்தப் பெருமானை வணங்கி வழிபட்டிருக்கையில் கோயில் நான்மணிமாலை யென்ற அரிய நூலைச் செய்து அருளினர்.

தென்னாட்டிலுள்ள திருக்கோயில்கட்குச் சென்று மேற் கூறியவாறு இறைவனைப் பணிந்து வந்த அடிகள் வடநாடு கோக்கிச் செல்லலுற்றுக் காஞ்சிமா நகரை அடைந்து அங்கே சின்னாள் தங்கினார். அப்போது அடிகள் திரு வேகம்பமுடையார் திருவந்தாதி பாடினார்.

பின்னர், வடநாடு சென்று அங்கே இருந்த மாகாளம் என்னும் ஊரை அடைந்தார். அது கோதாவரி பாயும் நாட்டில் பத்திராசலத்திற்கு அண்மையில் உள்ளது. மாகாளத்தை நெருங்குகையில் பொழுது மறைந்தமையால், அடிகள் அங்கிருந்ததொரு பாழ்ங்கோயிலில் தங்கினார். அந்