பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 . சைவ இலக்கிய வரலாறு

ஆடரங்கு, கலேபயில் கழகம், மலர் மன்றங்கள் தெருக்களில் ஆங்காங்குள்ளன. அரமியங்கள் புன்னேப் பொழிலாகவும் செய்குன்றுகள் கொன்றமரக்காவாகவும் கருதி,மொய்க்கும் வண்டினங்களின் கருமை நிறத்தால் இரவு வந்ததெனச் சில மக்கள் மயங்குகின்றனர். தில்லைநகர்க்கண் வயல் களில் கரும்புகள் தழைத்திருக்கின்றன. திண்ணிய மாடங்களும் மதில்களும் உயர்ந்து விளங்குகின்றன.' திருச்சிற்றம்பலத்தைச் சூழ மதிலும் மாடங்களும் பொழில்களும் நிறைந்துள்ளன. இத்தில்லையில் வேதியர் பலர் வாழ்கின்றனர் ; அவர்கள் வேள்வி செய்து முகில மழை பெய்யச் செய்கின்றனர். இறைவன் அந்த நான் மறையோர் நடுவில் தானும் ஒரு வேதியணுய் இருந்து அம் பலத்தில் ஆடல் புரிகின்ருன். வண்டுகள் தென்னவெனப் பொழிலில் முரலுகின்றன. தில்லை வேதியர் அவ்விறை வனத் தங்கள் வாழ்வாகவும் வைப்பாகவும் கொண்டு ஒழுகு. கின்றனர். கச்சி யேகம்பம் தடம்பொழில் சூழ்ந்து தேன் முரல விளங்குகிறது. வயல்கள், எப்போதும் நெல்பெருகிச் சிறக்கும் நீர்மை பெற்றுள்ளன. வயற் புறங்களில் நெற்கரிசைகள் பொன் மலைபோல் காட்சி நல்குகின்றன. அங்கேயுள்ள பொழில் பொய்கை முதலியன காண்போர் காஞ்சிமாநகர் அமராவதிக்கு நேராம் என்று கூறினர். இறுதியாகத் திருவொற்றியூர் நிலமடந்தைக்கு முகம் போலக் காட்சியளிக்கிறது : நெடுங்காலமாகப் புகழ் பெற்று நாடெங்கும் பெயர் பரவித் திகழ்கிறது. இங்கே வேதியர் இருந்து வியாகரணம் முதலிய நூல்களே ஒதும்

திருக்கழு ம. மும். 25.

1.

2. :ை 28. 3. கோயில் நான். 6. 4. 6) 7. 5. 6 15. 6. திருவேகம். அங். 86. 7. திருவொற். ஒரு. 1. 8. 62 3. 9. :ை 4.