பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேந்தனார்

387


சேந்தனார் சிறைப்பட்டவுடன், அவருடைய மனைவியும் மக்களும் மிக்க வறுமையுற்றுத் திருவெண்காட்டுக்கு அண்மையிலுள்ள ஊர்களில் இருந்து வந்தனர் என்றும், ஒருகால் பட்டினத்தடிகளை வெண்காட்டிற் கண்டு நிகழ்ந்தது கூறி வருந்தினர் என்றும், அடிகள் மனம் வருந்தி இறைவனைப் பாட, அவர் மூத்த பிள்ளையாரை விடுத்துச் சேந்தனாரைச் சிறைவிடு செய்யுமாறு பணித்தார் என்றும், பிள்ளையார் அவ்வண்ணமே செய்து திரும்பினர் என்றும், அதனால் திருவெண்காட்டில் அவருக்கு விலங்கு முரித்த 'விநாயகர் என்று பெயர் உண்டாயிற்றென்றும், பின்பு சேந்தனார் மனைவி மக்களுடன் தில்லையை அடைந்தார் என்றும் திருவெண்காட்டடிகள் சரித்திரம் கூறுகிறது.![1]

தில்லையில் வாழ்ந்தபோது சேந்தனார் நாடோறும் விறகு வெட்டி வந்து விற்று அதனால் வரும் பொருளைக்கொண்டு வாழ்க்கை நடத்தினார். அந்நிலலையில் அவர் நாளும் சிவனடியார் ஒருவர்க்கேனும் உணவு தாரா தொழிவதில்லை.

ஒரு நாள் சேந்தனர் மாவு கொணர்ந்து மனைவியிடம் தந்தார் என்றும், அவர் அதனைக் களியாகச் சமைத்தார் என்றும், பின்பு அச்சேந்தனார் அதனைச் சிவனடியார் ஒருவர்க்கு அளித்துப் பின் தம் மக்களுடன்தான் உண்டார் என்றும் அவருடைய வரலாறு கூறுகிறது.2[2] சிவ பெருமானே நள்ளிரவில் அவர் வீட்டுக்குச் சென்று கூழுணவு பெற்று அதன் மிகுதியைத் தமது திருமேனியிற் காட்டிச் சேந்தனார் பேரன்பை உலகவர்க்கு அறிவித்தனர் என்ப" என்று கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் கூறுவர்.

ஒருகால் தில்லையில் பறையர் குடியில் தோன்றிய சேந்தன் என்பான் இறைவனுக்குப் பழஞ்சோறு அளித்தானென்றும், அதனை இறைவன் அன்போடு உண்டான்


  1. 1. திருவெண். சரித்திரம் of ஈக்காடு. இரத்தினவேலு முதலி யார் பக். 29.
  2. 2. பட்டி. பிள். பிரபங். திரட்டு. முன்னுரை, பக். 28. (ஆ. சிங் கார வேலு முதலியார் பதிப்பு) -