பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

சைவ இலக்கிய வரலாறு


என்றும் ஒரு வரலாற்றினை நம்பியாண்டார் நம்பி[1] குறிக்கின்றார். தில்லைப் பறைச் சேந்தனையும், காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தனாரையும் பெயரொப்புமை பற்றி ஒருவராகக் கொண்டது தான் மேலே குறித்த வரலாற்றுக்குஉள்ளீடாக நிற்பது.

நூல்கள்

சேந்தனார் பாடியன எனத் திருவிசைப்பாவில் மூன்று திருப்பதிகங்களும் திருப்பல்லாண்டும் இப்போதுஉள்ளன. இவை பண்டைய சான்றோரால் சைவத் திரு.முறைகளில் ஒன்பதாம் திருமுறையிற் கோக்கப்பெற்றுள்ளன. திருவிழிமிழலைத் திருப்பதிகம் முதலியவற்றைப் பஞ்சமப் பண் எனப் பண்ணும் வகுத்துள்ளனர். இம்மூன்றும் இசைப்பாட்டுக்களாகவே இருத்தலால் இவை பண்டைச் சான்றோர்களால் பண்வகுக்கப் பெற்றுத் திருமுறைகளில் கோக்கப்பெற்றன என்று அறிதல் வேண்டும். ஒரு காலத்தில் திருஞான சம்பந்தர் முதலிய மூவரும் பாடிய திருப்பதிகங்களையும் இசைப்பா என்று முன்னையோர் வழங்கி யதுண்டென்று கல்வெட்டுக்கள்[2]’ கூறுகின்றன. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்[3]' என நம்பியாரூரர் கூறுவதனுள் இன்னிசை என்றது, இனியஇசைப் பாவால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்றபொருளில் நிற்பது இதற்குத் தக்க சான்று.


t


  1. 1. கோயிற்றிருப் பண்ணியர் : 26, 'பூங்தண் பொழில் சூழ்புலியூர்ப் பொலி செம்பொன் அம்பலத்து, - வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரி துணிமேல், ஆங்தண் பழைய அவிழை யன்பாகிய பண்டைப் பறைச், சேந்தன் கொடுக்க அதுவுந் திருவமுதாகியதே.
  2. 2. A. R. No. 452 of 1917.
  3. '3. சுங். தேவா. 62 : 8.