பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 சைவ இலக்கிய வரலாறு

வந்து வேதாந்த நூல்களேப் பயிலும் பிராமண மாணவர் பொருட்டுத் திருக்குடந்தைச் சீபாக்கியத்துறை யென்னும் மடத்துக்குக் குன்றத்து நாராயணன் என்பான் திரு விடைக்கழிப் பிடாகையான போதிமங்கலத்தில் நிலங்கள் ஐந்து வேலி வாங்கி விட்டதாக இவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுவது சேந்தனர் காலத்து வைதிகக் கல்வி நிலேயை வெளிப்படுத்துகிறது.

இனி, சேந்தனர் பாடிய இசைப்பாக்களுள் திருப் பல் லாண்டு என்பதும் ஒன்று ; அது பஞ்சமப் பண்ணென்றே திருமுறை கண்ட சான்ருேர்களால் பண் வகுக்கப்பெற்று உள்ளது. ஆயினும், ஒன்பதாங் திருமுறையைத் தொகுத் தோர், சேந்தனுர்க்குப் பின்வந்த சான்ருேர் பாடிய இசைப் பாக்களேத் தொகுத்து எல்லாவற்றிற்கும் இறுதியில் இத் திருப் பல்லாண்டைத் தொகுத்துள்ளனர்; ஆயினும் இதற்கு ஒரு காரணமும் திருமுறை கண்ட வரலாற்றில் காணப்படவில்லை. - . வானவரும் பிறரும் இறைவனைப் பல்லாண்டு பாடி வாழ்த்துவது தாம் இன்பமாக வாழ்வது குறித்திருப்பது போல், உலகவராகிய நாம் பிறவித்துயர் நீங்கி இன்ப வாழ்வு பெறுதற் பொருட்டு இறைவனவாழ்த்துகின்ருேம் ; இதன்கண், "அடியோமுக்கு அருள் புரிந்து பின்னப்பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே” என்றும், ஆருயிர் மேற் பந்தம் பிரியப் பரிந்தவனே யென்று பல்லாண்டு கூறுதுமே ' என்றும் சேந்தனர் கூறுவன மேற்கூறிய கருத்தைத் தெரிவிக்கின்றன. -

இனி, திருமாலடியாருள் ஒருவராகிய பெரியாழ்வார் பாடியுள்ள திருப்பல்லாண்டுக்குப் பொருள் கூறிய உரை காரர்கள், திருமால் திருவுலாப் போதரக் கண்ட ஆழ் வார், திருமாலின் திருமேனி, பலரால் காணப்படுதலால் கண்ணேறு முதலிய தீங்கெய்துமென அஞ்சிப் பல்லாண்டு

1. A. R. No. 276 of 1925. 2. திருப்பல். 1. 3. ை13."