பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தனர் 393

பாடினர்' என்று கூறுகின்றனர். ஈண்டு, மார்கழித் திரு வாதிரை விழாவில் தில்லைக்கூத்தப் பெருமான் தேர் மேல் உலா வந்தபோது தேர் முட்டுற்றுப் பெயராது நிற்கவும், அதுகண்டு சேந்தனர் இத் திருப் பல்லாண்டை ஒதவே தேர் இனிது சென்றது எனவரும் சேந்தனர் வரலாறு அக் கருத்தையே வற்புறுத்துகிறது. இதனால் திருப் பல்லாண்டு என்பது மங்கலக் காப்பாக நிற்கும் மாண்புடையது என்பது தெளிவாம்.

சைவத் திருமுறைகளே ஒதுமிடத்து முடிவில் இத்திருப் பல்லாண்டை மங்கலக் காப்பாகக் கூறி முடிப்பது வழக்க மாக இருந்து வருகிறது. திருமாலடியார்கள் நாலாயிரப் பிரபந்தத்தை " அத்யாபாகம் செய்யுமிடத்துப் பெரி யாழ்வார் பாடிய திருப் பல்லாண்டை முதற்கண் ஒதித் தொடங்குவர் : சைவர்கள் திருப் பல்லாண்டை ஒதித் திருக் கடைக்காப்புச் செய்வர். மிக்க பிற்பட்ட காலத்தில் சைவ வோதுவார்கள், திருப் பல்லாண்டுக்குப் பின் திருத் தொண்டர் புராணமும் அதன் பின் திருப்புகழும் ஒதித் திருக்கடைக்காப்புச் செய்வாராயினர். இம்முறையில்தான் இன்றும் சைவத் திருமுறை பாராயணம் நடந்து வருகிறது. இறுதியாக ஒன்று கூறி இப்பகுதியை முடிக்கின்ரும் ; ஒன்பதாங் திருமுறையில் காணப்படும் சான்ருேர்களுள் ஒருவரான திருமாளிகைத் தேவரும் சேந்தனரும் ஒருவரே; இருவராகக் கொள்வதற்கு இடமில்லே என்ற கருத்துப் படக் காலஞ் சென்ற திரு. அ. கோபிநாத ராயர் அவர்கள் கூறுவர்; அதற்கு ஆதரவாக, அவர், முதல் இராசராசன் காலத்துத் திருவிழிமிழலையில் தோன்றிய கல்வெட்டு ஒன்றை மேற்கொள்கின்றனர். அவர் கருத்தை ஆராய்ந்த திரு. K. A. நீலகண்ட சாத்திரியவர்கள், உமா பதி சிவனர் காலத்துக்கு முன்பே நிலவிவந்த ஒன்பதாங் திருமுறை ஆசிரியருள் திருமாளிகைத் தேவரும் சேந்தன ரும் வேறு வேருகவே கருதப்பட்டு வந்துள்ளனர் ; இத்திரு

1. செந்தமிழ் Vol. 111. பக். 358-62. 2. A. R. No. 449 of 1908.