பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. நந்திக் கலம்பகம்

இவ்வொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இந்நூல், இப்பகுதியில் முதற்கண் கூறப்படவேண்டிய தாயினும், இதனை ஆக்கிய ஆசிரியர் பெயர் தெரியப்படாமையின், இறுதிக்கண் கூறப்படுகிறது. இது, தெள்ளாறு எறிந்த நந்திவன்மன்மேல் பாடப்பட்ட கலம்பகவகை. நந்திவன்மன் கி. பி. 326 - 849 வரைக் காஞ்சிமா நகர்க்கண் இருந்து ஆட்சிசெய்தவன். இவன் தந்தை தந்திவன்ம பல்லவவேந்தன். .

தந்திவன்மன் காலத்தே பல்லவராட்சி தென்னாட்டில் தேயத்தொடங்கிற்று. தொண்டை நாட்டில் தெற்கில் பெண்ணையாற்றங்கரை வரையில் பாண்டியர் முன்னேறி அங்குள்ள அரசூரில் தங்கியிருந்தனர். நந்திவன்மன் அரசு கட்டில் ஏறியதும் அவர்கள் காஞ்சிமாநகர் நோக்கி வந்தனர். நந்திவன்மன் அவர்களைத் தெள்ளாறு என்னுமிடத்தே எதிர்த்து வென்றான். தெள்ளாற்றில் அவர்கள் தங்கினமையின், நந்திவன்மன் தெள்ளாற்றுக் கோட்டையைத் தகர்த்தெறிந்து வென்றான். அது முதல் அவற்குத் தெள்ளாறு எறிந்த நந்திவன்மன் என்ற சிறப்பு உண்டாயிற்று.![1]

நந்திவன்மன் பின்னரும் பாண்டியருடைய குறும்புகளை அடக்கக் கருதி மேலும் போர்தொடுத்து அவர்களைப் பாண்டிநாட்டு வையைக்கரை வரையில் துரத்திக்கொண்டு சென்றான் என்று அவனது வரலாறு கூறுகிறது. நந்திவன்மனது ஆட்சி தொண்டை நாடு முழுதும் பரந்து காவிரியின் வடகரைப்பகுதி முற்றும் தன்கண் கொண்டிருந்தது. அவனது புகழோ தமிழகம் முழுதும் பரந்திருந்தது. அவன்காலத்தில் வாழ்ந்த சோழரும் பாண்டியரும் பின்பு நட்புற்றிருந்தனர். அந்நாளில் முதல் வரகுண


  1. I. S. I. I. Vol. XII. No. 56; A. R. No. 144 of 1928-9.