பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்திக் கலம்பகம்

399



என்பது பாடப்பட்டதும் சிதை திப்பற்றிக் கொண்டு எரிந்தது ; நந்திவன்மனும் வெந்து சாம்பரானான்.

இனி வேறொரு கதையும் இக் கலம்பகம் பற்றி வழங்குகிறது. நந்திவன்மன், அவன் தந்தையான நந்திவன்மற்கு உரிமை மகன் அல்லன் என்றும், நந்திவன்மனுக்கு அரசுரிமை வழங்கியது பற்றிக் குடிகள் நந்திவன்மன்பால் வெறுப்புக்கொண்டு கொல்ல முயன்றனர் என்றும், நந்தி வன்மன் இறந்தபின் அவனுடைய உரிமைமகனை குலமகன் கொல்லாபுரிச் சந்திரன் என்பவன் என்றும், அவன் நந்தியைக் கொல்லுதற்குத் தானே இக் கலம்பகத்தைப் பாடினன் என்றும், அதனை அறிந்த நந்திவன்மனுடைய அமைச்சர் அதனை எவரும் படிக்கக் கூடாது என விலக்கினாரென்றும், அவன் ஒருநாள் தன் பரத்தை வீட்டில் அவள் மகிழச் 'செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச், சந்தனமென்று ஆரோ தடவினர்-பைக் தமிழை, ஆய்கின்ற கோநந்தி ஆகம் தழுவாமல், வேகின்ற நெஞ்சே விரைந்து' எனவரும் பாட்டை நந்திக்கலம்பகத்திலிருந்து பாடினன் என்றும், அவ்வழியே வந்த ஊர்க் காவலன் அவனைக் கொண்டு சென்று நந்திமுன் நிறுத்த, நந்திவன்மனும் அப் பாட்டைக் கேட்டுப் பெருமகிழ்வு கொண்டு முழுதும் கேட்க விரும்பி முன் கதையிற் கூறியவாறே பக்தரிட்டுக் குலமகன் கொல்லாபுரிச் சந் திரன்பாடக் கேட்டு இறந்தான் , நந்திக்குப் பின் அவன் தம்பியைக் கொல்லாபுரிச் சந்திரன் என்பான் முடிசூட்டி அரசனுக்கினன் என்றும் அக்கதை கூறுகிறது. இதற்கு, வெல்லாமல் வென்று நற் சந்தனக் காட்டத்தின் மேலி ருந்து, நல்லாறை நந்திக்கலம்பகம்கேட்டபின் நற்றுணைக்குக் கொல்லாபுரிச் சந்திரன் மாமுடிசூட்டக் குடை கவித்து, மல்லார்புரித் தொண்டைமானானதும் தொண்டைமண்டல மே [1]' என வரும் சதகப்பாட்டுச் சான்றாகக் காட்டப்படுகிறது.


  1. 1. தொண். மண்ட, சதகம். 86.