பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்திக் கலம்பகம்

401



விளங்குகிறது. பல்லவ வேந்தருள் இம் மூன்றாம் நந்திவன்மனுக்கு முன்னும் பின்னும் தோன்றியவருள் எவரும் இவனைப் போலத் தனி நூல்வடிவில் புலவர் பாடும் புகழ் பெற்றவர் இருந்ததாக இதுகாறும் தெரிந்திலர். இவன் காலத்தில்தான் பெருந்தேவனார் பாரதம் பாடியது மாகும்; அவர் இவ்வேந்தனைப் 'பல்லவர் கோமான் பண்டிதராலயனைப் பரவினேம்[1] ' என்று கூறுவது இதற்கு ஏற்ற சான்று.

இக் கலம்பகம் பாடிய புலவர், தெள்ளாறெறிந்த நந்திவன்மன், ' விடையுடன் மங்கல விசயமும் நடப்ப, ஒரு பெருந் தனிக்குடைநீழல், அரசுவீற்றிருக்க அருளுக என2[2] சிவபெருமானப் பரவுவதும், 'வாழி நந்தி தண்ணிழல் வெண்குடை ஊழிநிற்கவே[3] '’ என வாழ்த்துவதும், நோக்கின், இக்கலம்பகம் நந்திவன்மனைக் கொல்லும் குறிப் பொடு பாடப்பெற்ற தென்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. மேலும், இக் கலம்பகமுடையார், "பகையின்றிப் பார் காக்கும் பல்லவர்கோன்' என்பதும், பாடும் பாணாற்றுப்படையும் ' மண்ணெலா முய்ய மழைபோல் வழங்கு கரத், தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி ' என்றும், பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி' என்றும் கூறுவதும் நந்திவன்மன்பால் பகைமை யுடையரல்ல ரென்றே காட்டுகின்றன.

நந்திவன்மன் தந்திவன்மனுக்கு நேரிய மகன் என்பதே செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் பெறப்படுவது; கலம்பகம் பற்றிய வரலாறுகள் கூறும் கூற்றுக்கு ஒருவகை ஆதரவும் இல்லை.

நந்திவன்மனுக்குத் தம்பியர் உண்டென்றும், அவர்கள் அவனுக்குமாறுபட்டு ஒழுகினரென்றும் இக்கதைகள் கூறுவதுபோலவே, இக் கலம்பகமுடையாரும், "குலவீரர் ஆக




S{V–26


  1. 1. பார. வெண்.4. உரைநடை.
  2. 2. நக்திக். 1.
  3. 3. நந்திக். 21.