பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்திக் கலம்பகம்

403

 தெள்ளாறெறிந்த நந்திவன்மனுக்கு இந்நூல் பல சிறப்புப் பெயர்களே வழங்குகிறது. நந்தி[1] அவனி நாராயணன்,[2] பல்லவர்கோன்[3]. மல்லைப் புரவலன்,[4] மல்லையங்கானல் முதல்வன்,[5] மயிலே காவலன்,[6] தொண்டை வேந்தன்,[7] சோணாடன்,[8] உறந்தையர் கோன்,[9] சந்திரகுலப் பிரகாசன்,[10] உக்கிரமகோபன்,[11] குவலய மார்த்தாண்டன்,[12] தேசபண்டாரி,[13] மானோதயன்,[14] விடேல் விடுகு'[15] என்பன அவற்றுட் சிறப்புடையனவாகும். இவ்வாறே, சோணாடு,[16] வடவேங்கடநாடு,[17] கச்சிநாடு,[18] அங்கநாடு[19] முதலிய நாடுகளும், மல்லை,[20] மயிலை,[21] கச்சி,[22] கடம்பூர்[23] குருக் கோட்டை,[24] தெள்ளாறு,[25] தொண்டி,[26] பழையாறு,[27] வெள்ளாறு,[28] வெறியலூர்,[29] முதலிய ஊர்களும் குறிக்கப்படுகின்றன.

“அவர் நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன் நெஞ்சே நீ எமக்காகாதது”[30] என்ற திருக்குறளே, இக்கலம்பக முடையார், “நம்மாவி நங்கொழுநர் பாலதாம் நங்கொழுநர், தம்மாவி தம்பாலதாகும் தகைமையினால், செம்மாலை நந்தி சிறுகுடி நாட்டன்னமே, தம்மாவி தாமுடைய ரல்லரே


  1. நந்திக். 1.<
  2. நந்திக். 14.<
  3. நந்திக். 40.<
  4. நந்திக். 83.<
  5. நந்திக். 3.<
  6. நந்திக். 51.<
  7. நந்திக். 5.<
  8. நந்திக். 5.<
  9. நந்திக். 44.<
  10. நந்திக். 39.<
  11. நந்திக். 20.<
  12. நந்திக். 29.<
  13. நந்திக். 87<
  14. நந்திக். 48.<
  15. நந்திக். 13.<
  16. நந்திக். 74.<
  17. நந்திக். 55.<
  18. நந்திக். 10,32.<
  19. நந்திக். 39.<
  20. நந்திக்.54.<
  21. நந்திக். 55.<
  22. நந்திக். 8.<
  23. நந்திக். 25.<
  24. நந்திக். 2.<
  25. நந்திக். 53.<
  26. நந்திக்.38.<
  27. நந்திக். 31.<
  28. நந்திக். 19.<
  29. நந்திக். 27.<
  30. திருக்குறள் 1291<