பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

சைவ இலக்கிய வரலாறு


சாகாமே[1] ' என்ற பாட்டின்கண் வைத்துப் புதுவதொரு நயந்தோன்றக் கூறுவதும், “ஈட்டு புகழ்நந்தி பாணநீ எங்கைபர்தம், வீட்டிருந்து பாட விடிவளவும்-காட்டிலழும், பேயென்றாள் அன்னை பிறர்நரி என்றார் தோழி, நாய் என்றாள் நீ யென்றேன் நான்”[2] ' என நகைச்சுவை தோன்றக் கூறுவதும் பிறவும் கற்றோர் சுவைத்து இன்புறும் கவினுடையவாகும்.

தெள்ளாறெறிந்த நந்திவன்மன் காலத்தே பெருந்தேவனார் என்பார் பாரதவெண்பா என்னும் நூலை உரையிடையிட்ட செய்யுள் முறையில் செய்திருக்கின்றார். இந் நந்திக் கலம்பகத்தைப் பாடிய ஆசிரியரும் அப் பெருந்தேவனரேயாகலாம் எனத் திரு. மு. இராகவையங்கார் அவர்கள்:[3] கருதுகின்றார்கள். கேள்வி வழிச்செய்தி அதற்கு ஆதரவு ஒன்றும் நல்குகின்றதில்லை : பாரதம்பாடிய பெருந்தேவனார்[4] பாயிரத்துள் விநாயகரைக் காப்பாகப் பாடுவதொன்று. கொண்டு சைவராகக் கோடற் கில்லை, சருக்கந்தோறும் அவர் திருமாலையே பாடியிருக்கின்றார். அதனால் அவர் திருமாலடியாராவர் என்றற்கு மிக்க இடமுண்டாகிறது. ஆகவே, இருவரையும் ஒருவராகக்கூறுவது நிரம்புமாறில்லை. இனி, இவ்வொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அரசுபுரிந்த பல்லவவேந்தனை அபராஜிதன் காலத்தே நம்பி அப்பி என்பவர் திருத்தணிகையில் உள்ள வீரட்டேசுரர் கோயிலுக்குத் திருப்பணி பல செய்துள்ளார். அத.னைப் பாராட்டிப் பல்லவ வேந்தனே ஒருபாட்டை, திருந்து திருத்தணியற் செஞ்சடை யீசற்குக், கருங்கல்லாற் கற்றளியா நிற்க-விரும்பியே, நற்கலைகளெல்லாம் நவின்ற






  1. அ. கோபாலையர் நந்திக். பக். 24. செய். 10.
  2. 2.௸ பக். 25. 13.
  3. 3.மு. இராகவையங்கார், சாசனத் தமிழ்க்கவி சரிதம். பக். 25.
  4. 4. இப் பெருக்தேவனுரை ஒட்டியே வில்லிபுத்துரரும் தாம் பாடிய பாரதத்தில், பெருந்தேவனர் எங்கெங்கே திருமாலப் பாடிப் புரவிகுரோ அங்கங்கே தாமும் திருமாலே வழிபட்டிருப்பது ஈண்டு நினைவுகூாற்பாலது.