பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார்

411


அவனுடைய கொடைநலமும் தமிழ்ப் பண்பும் கேள்வியுற்ற ஒளவையார் அவன்பாற் சென்றார். அவன் அவரைச் சிறப்புடன் வரவேற்று மகிழ்வித்தான். அவனது கொடை நலத்தையும் குடிநலத்தையும் வியந்த ஒளவையார் அவன் மேல் ஒர் அந்தாதி நூலைப்பாடினார். அது,

“சீர்மடங்தை கேள்வன் திருமடந்தை தன் கொழுநன்
போர்மடந்தை நாதன் அருள் போதையர் கோன்
பார்மடந்தை .

மைந்தன் கடற் புகார் மாநாகன் நாகந்தை
எந்தையுளான் எங்கட்கிடம் '”

என்று தொடங்கி,

“ஏமார்ந்திருந்தும் இயல்வேந்தர் செப்பியிடும்
காமார்ந்த காவிரிப்பூம் பட்டினத்தில்-பாமாந்தர்
கூடும் பசும்பொன் கொடுத்துக் கொடுத்து நலம்
தேடும் புகழ்ப் பக்தன்சீர்”

என்று முடிகிறது.

இதன்கண் போதியார் புலியூர் என்பது போதையெனத் திரிந்து மரூஉவாக வழங்குகிறது. இதுகேட்டு மகிழ்ந்த பந்தன், பொற்படாம் ஒன்று நல்கித் தன்பெயரால் அமைந்த பந்தமங்கலத்தை அடுத்திருக்கும் குப்பத்தை ஒளவையார்க்கு அவரது பெயரையே இட்டு வழங்கினான். இந்நூலிடையே ஒளவையார் தமது பெயரையும் வைத்து, "நான் அவ்வை என்று இரங்கி வாழ்த்தினேன் மற்றவனும், ஏன் அவ்வையே என்று இறைஞ்சினான்' என்று பாடி இருக்கின்றார். பந்தனுடைய தமிழ் நலத்தை, "கூடல் தமிழ்ச் சங்கம் கொண்டாடும் கோவணிகன், மாடப் புகார்நீடு மாநாகன்' என்று சிறப்பித்து அவன் தனக்குப் பொற்படாம் ஈந்தசெய்தியையும் குறிக்கின்றார். இவ்வரலாற்றை வைசிய புராணம் என்னும் நூல் ஒளவைக்குப் பொற்படாம் ஈந்த அத்தியாயத்தில் விரிவாகக் கூறுகிறது.[1]'


  1. 1. Triennial Catalogue of Manuscripts collected during: 1910-11 to 1912-13, R. No. 44 (a). page 105 of Part 2. Tamil.