பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார்

415

தன் கையிலிருந்த களைக்கட்டை (களைக் கோல்) ஒளவையார் கையில் கொடுத்து விட்டுச் சென்றான். அவன் வருந்துணையும் ஒளவையார் களைகளைந்தார். சிறிதுபோதிற்கெல்லாம் அவன் திரும்பவந்து அவரை அழைத்துச் சென்று தனக்கென அமைத்திருந்த உணவை நல்கி அவரை மகிழ்வித்தான். ஒளவையார் பின்பு ஒருகால் பிறிதோரிடத்தே பாட நேர்ந்தபோது “பழையனூர்க் காரி அன்று ஈத்த களைக்கோலும்” என்ற இச்செய்தியைப் பாடினர். இதனைத் தொண்டை மண்டல சதகம், “ஏரின் இயற்றும் களேக்கோலை யீந்து அன்னம் இட்டு நல்ல, பாரி பறித்து என்னும் பாடல் கொண்டோன் பண்புசேர் பழைய, னுாரில் இருப்பவன் ஒளவை தன்பாடற்கு உவந்த பிரான், மாரி எனத் தரு கைக் காரியும் தொண்டை மண்டலமே”[1] என்று கூறுகிறது. பாரி பறித்த பறிக்கதையும் சேரமானான அதியமான் வாராயோ என அழைத்த வரலாறும் தெரியவில்லை.

ஒருகால் பழையனூர்க்காரிக்கு ஆடு வேண்டியிருந்தது. ஒளவையார் அப்பகுதியில் வாழ்ந்த வாதவன் வத்தவன் யாதவன் என்ற இடையர் தலைவர் மூவரைக் கண்டு காரிக்காக ஆடு தருமாறு கேட்டார்; அவர்கள் முறையே பின்னேவா, நாளைவா, ஒன்றுமில்லே-போ எனக் கூறினர். பின்பு ஒளவையார் சேரமானிடம் சென்று கேட்க, அவன் பொன்னல் ஆடொன்று செய்து தந்தான். அது பெற்றுக் கொண்டு பழையனூரை அடைந்து காரிக்கு நடந்தது கூறலுற்று,


“வாதவர்கோன் பின்னே யென்றான் வத்தவர்கோன் நாளை யென்றான்,
யாதவர்கோன் யாதொன்றும் இல்லே என்றான்-ஆதலால்,
வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோன் நாளையினும்

யாதவர்கோன் இல்லை இனிது”[2]

என்றும்,


  1. தொண்டை மண். சதகம். 18.
  2. தமிழ் நாவலர் சரிதை. 27.