பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

சைவ இலக்கிய வரலாறு


“சிறப்பார் மணிமுடிச் சேரமான் றன்னனைச்
சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன்று ஈந்தான் ;
இரப்பவர் என் பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தங்கொடையின் சீர்[1] 1

என்றும் பாடினார்.

தொண்டை நாட்டில் பெண்ணையாற்றை அடுத்த பகுதியில் புல்வேளுர் என்பது ஒர் ஊர். அவ்வூரில் பூதன் என்று பெயர் கொண்ட வேளாளர் தலைவனொருவன் வாழ்ந்து வந்தான். ஒருகால் அவன் தன் வாழைத் தோட்டத்துக்குக் கிணற்று நீரை இறைத்துப் பாய்ச்சுவதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கையில், அவ்வழியே வந்த ஒளவையார் அவனைக் கண்டு, தமது பசி வருத்தம் கூறினர். அப்போது அவன் அவருக்குத் தனக்குஎன வந்திருந்த வரகரிசிச் சோற்றையும் கத்தரிக்காய் வறுவலையும் புளித்த மோரையும் தந்து மகிழ்வித்தான். அம் மகிழ்ச்சியால், “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும், முரமுர என்றே புளித்த மோரும்-பரிவுடனே, புல்வேளுர்ப் பூதன் புகழ்ந்திட்ட சோறுகாண் எல்லா உலகும் பெறும்'”[2] என்று பாடினர். இச்செய்தியைத் தொண்டை மண்டல சதகம்,

சொல்லாயும் ஒளவை பரிவாய்
தனக்கிட்ட சோறு உலகம்
எல்லாம் பெறும் என்று பாட்டோதப்
பெற்றவன் இன்னருளால்
கல்லாரல் சுற்றிக் கிணறேறிப்
பாயும் கழனி பெற்றான்
வல்லாளன் பூத மகி பாலனும்
தொண்டை மண்டலமே

[3] என்று கூறுகிறது. பின்பு ஒருகால் அவர் அதியமான் வழி வந்தோர் ஒருவர் மனையில் விருந்துண்டபோது அவ்வதிய


  1. 1. தமிழ் நாவலர் சரிதை.
  2. 28. 2. ௸ 26,
  3. 3. தொண். மண். சத. 54.