பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 42H

பரும்,பேராசிரியரும் இக் கொன்றை வேய்ந்த செல்வன்' என்ற காப்புச் செய்யுளே மேற்கோளாகக் காட்டியிருத்தல் ஈண்டு நினைவு கூரத்தக்கது. இனி, கி. பி. 11-ம் நூற் ருண்டில் இருந்தவர் எனப்படும் யாப்பருங் கலவிருத்தி யுரைகாரர். வெண் செந்துறைக்கு எடுத்துக் காட்டாகக் காட்டுகின்ருர். இவ்வாற்ருல் இந்நூல்கள் கி. பி. பத்தாம் நூற்ருண்டில் தோன்றினமை தெளியப்படும். இந்நூல் கட்குப் பழையவுரை யொன்று உளது.

2. மூதுரை - மூதுரை என்பது முப்பது வெண்பாக்களாலாகிய நீதி நூல்: "வாக்குண்டாம் எனத் தொடங்கும் காப்புச் செய்யுளேயுடையதாதலால், இது வாக்குண்டாம் என்றும் இந்நாளில் வழங்குவதுண்டு. உயர்ந்த நீதி நூல் கருத்துக் களே மிக்க எளிய நடையில் இளஞ்சிருர்களின் அறி வெல்லேக்குட்பட்ட சொற்களால் உணர்த்துவதில் இம் மூதுரை சிறந்து விளங்குகிறது. "வெண்பாட்டு ஈற்றடி முச்சீர்த்தாகும்' எனவரும் செய்யுளியற் குத்திரவுரை யில், இந் நூற்கண் உள்ள, .

  • , அட்டாலும் பால்சுவையிற் குன்ருது அளவளாப்,

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ங்கு சுட்டாலும் வெண்மை தரும் '8

என்ற பாட்டைப் பேராசிரியரும் நச்சினர்க்கினியரும் எடுத்துக் காட்டுகின்றனர்.

3. நல்வழி

இது, நாற்பது வெண்பாக்களால் ஆகியதொரு நீதி நூல். இதன்கண் மெய்ந்நூற் கருத்துக்கள் பல எளிய

1. யாப். விருத்தி. கு. 63. உரை. 2. தொல். செய். கு. 72. 3. மூதுரை. 4.