பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற் கண்ட ராதித்தர்

427

தெளிவாக விளங்குகிறது. இக் கருத்துப்பற்றியே இக் கண்டராதித்தர், "மேற்கெழுந்தருளிய தேவர்" 1என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பெறுகின்றார்.

கண்டராதித்தர், "மேற்கெழுந்தருளிய" கங்கநாட்டில் இருந்த காலத்தில் தில்லைச் சிற்றம்பலத்துப் பெருமானைக் காணவேண்டிய விருப்பம் மிகுந்தார். அப்போது, நம்பியாரூரர் திருக்கச்சியேகம்பம் வந்திருக்கையில் திருவாரூர் இறைவனைக் காண்டற்கு விருப்பம் மிகுந்து பாடிய திருப்பதிகம் அவர் நினைவுக்கு வந்தது. அதனை ஓதிய பயிற்சி நலத்தால்,

"மின்னா ருருவ மேல் விளங்க
வெண்கொடி மாளிகை சூழப்
பொன்னார் குன்றமொன்று வந்து
நின்றதுபோலும் என்னுத்
தென்னாஎன்று வண்டுபாடும்
தென்றில்லை பம்பலத்துள்
என்ன ரமுதை எங்கள்கோவை2
என்றுகொல் எய்துவதே"

என்று தொடங்கும் திருவிசைப்பாவைப் பாடிக் கொண்டு. தில்லைக்கு வந்துசேர்ந்தார்.

பதிக ஆராய்ச்சி

சைவத் திருமுறைகளை முறைசெய்து தொகுத்த பண்டைச் சான்றோர் இசையை அடிப்படையாகக்கொண்டே தொகை செய்தன. ரெனத் திருமுறைகண்ட வரலாற்றால் அறிகின்றோம். கண்டராதித்தர் பாடிய இத் திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் தொகுக்கப் பெற்றுப் பஞ்சமம் என்று பண்ணடைவும் குறிக்கப் பெற்றுளது. மேலும், அவ்வரலாறு, "துரங்கிசை நேர் பஞ்சமத்திற் கொல்லை-


1. A. R. No. 540 of 1920.

2. சோழர் குலத்துக்குத் தில்லேயம்பலத்துக் கூத்தப் பெருமான் குலமுதற் கடவுளாதலால், இவ் வேந்தர் பெருமான் "எங்கள் கோவை" ' என்று குறிக்கின்றார் என அறிக.