பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428

சைவ இலக்கிய வரலாறு

யினிலொன்ருக்கி1 என்றும், துர்ய இசை பஞ்சமத்துக்கு அற்ற இசை ஒன்றாக்கி2 என்றும் கூறுவதால் இப்பஞ்சமப் பண்ணுக்குக் கட்டளை ஒன்று என்பது பெறப்படுகிறது.

தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர் என்ற தொகையினர் என்பது திருஞானசம்பந்தர் முதலிய மூவர் திருமுறைகளிற் காகாணப்படுவதில்லை; மாணிக்க வாசகர், "தில்லையம்பலத்து மூவாயிரவர் வணங்க நின்றோன்"3 என்று சிவபெருமானைக் கூறுமிடத்து, தில்லையந்தணரை மூவாயிரவர் எனக் குறிக்கக் காணுகின்றோம். இத் தொகையை விதந்து, இத் திருவிசைப் பாவில் கண்ட ராதித்தர், "அந்தணாளர் ஆகுதிவேட்டு உயர்வார் மூவாயிறவர் தங்களோடுமுன் அரங்கேறி நின்றகோவே"4 என்றும், "முத்தியாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னேடு, ஒத்தே வாழும் தன்மையாளர்"5 என்றும் எடுத்தோதுகின்றார். இதன்கண், "நான்மறையோர், ஆவே படுப்பார் அந்தணாளர்"6 என்று கண்டராதித்தர் கூறுவது, "பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டு எரியோம்பும், சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம்"7 என்று திருஞான சம்பந்தர் காட்டிய குறிப்பை நினைப்பிக்கின்றது.

"தெத்தே யென்று வண்டுபாடும் தென் தில்லையம்பலத்துள் அத்தாவுன்றன் ஆடல்காண அணைவதும் என்று கொலோ"8 எனச் சோழவேந்தர் சொல்வது, "முத்தனே முதல்வா தில்லையம்பலத்து ஆடுகின்ற அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே"9 என்ற திருநாவுக்கரசர் திருமொழியை மேற்கொண்டு இயலுகின்றது . இவ்வாறே, "இலேயார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளுமிற, மலைதான் எடுத்த மற்றவர்க்கு வாளொடு நாள் கொடுத்தான்" என்று வரும் திருவிசைப்பா,


1. திருமுறைகண். பு. 38.

2. திரு முறை கண். பு. 48.

3. திருக்கோவையார். 72.

4. திருவிசைப். 2.

5. திருவிசைப். 3.

6. ஷை 2.

7. திருஞான. 80 : 2.

8. கண்ட. திருவிசைப், 3.

9. திருநாவுக். 23: 1.