பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432

சைவ இலக்கிய வரலாறு

பள்ளிக் கேகின் எங்கள் ஆசிரியன் அடிப்பான் ; ஆதலால் யான் சென்று கற்றற்குரியவற்றை நீயே கற்பித்தல்வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்; பொல்லாப் பிள்ளை யாரும் அவ்வாறே அறிவித்தருளினார்.

ஊர் திரும்பிவந்த தந்தைக்கு நம்பியின் செயலும் பொல்லாப் பிள்ளையாரின் அருணலமும் தெரிந்தன. அச்செய்தி நாளடைவில் நாடெங்கும் பரவிவிட்டது. அப்போது சோழ நாட்டை யாண்ட வேந்தர் பெருமான் செவிக்கு இச்செய்தி எட்டியது. அவன் திருஞானசம்பந்தர் முதலியோர் அருளிய திருப்பதிகங்களில் பேரீடுபாடு உடையன்.

ஒருகால், அச் சோழவேந்தன் திருப்பதிகம் ஓதவல்ல ஒருவரைக் கண்டு அவரிடத்தில், ஞானசம்பந்தர் நாவுக்கரசர் நம்பியாரூரர் ஆகிய மூவரும்பாடிய திருப்பதிகங்களுள் ஒவ்வொன்று பாடக்கேட்டான். மேலும் பல கேட்பான் அவன் விரும்பிய போது அவை கிடைக்கவில்லையென அவர் கூறினார். அதனால் ஏமாற்ற முற்ற வேந்தன் மூவர் திருப்பதிகங்களேயும் தேடித் தொகுக்க முயன்றான், அவனுக்குத் திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பி தோன்றிப் பொல்லாப் பிள்ளையாரது திருவருள் பெற்றுச் சிறந்து விளங்கியது தெரிந்ததும் அவர்பால் வந்து வாழைக்கனி முதலிய பலவகைக் கணிகளைத் தந்து பிள்ளையாருக்கு நிவே திக்கச்செய்து உண்மை யுணர்ந்து மூவர் தமிழும் திருத் தொண்டர் வரலாறும் உலகில் விளங்கச் செய்யவேண்டுமென விழைந்தான். அவ்வண்ணமே அவர் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளவே, பொல்லாப் பிள்ளையார், "தில்லையில் பரமன் திருக்கூத்தியற்றும் அம்பலத்தின்புறக்கடையில் வைத்துக் கையடையாளமிடப் பெற்றுள்ளன" என்று சொல்லித் திருத்தொண்டர் வரலாற்றையும் அறிவுறுத்தருளினார்.

இதுகேட்டு மகிழ்ச்சி மிகுந்த வேந்தன், நம்பியாண்டார் நம்பியுடன் தில்லைக்குப்போந்து தில்லைவாழந்தணர்க்குத் தெரிவித்தான். அவர்கள், "தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்" என்றனர். வேந்தன் மதிநுட்பமுடைய-