பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாண்டார் நம்பி

433

னாதலால் அம்பலவாணர்க்குத் திருவிழாச் செய்து மூவர் முதலிகளைத் திருவீதி யுலாப் போதுவித்துத் திருநெறித் தமிழ் இருந்த இடத்திற்கு எழுந்தருள்வித்து "மூவரும் வந்தார்" என்றான் : அந்த அறை திறக்கப்பட்டது. அங்கிருந்த ஏடுகளின் மேல் புற்று மூடிக்கொண்டிருந்தது. கண்ட வேந்தன் திடுக்கிட்டுக் கையற்றுக் கலங்கி வருந்தினான். பின்பு அதனை நீக்கிப் பார்த்தபோது பல ஏடுகள் செல்லரிக்கப் பெற்று மண்ணாய்விட்டன. நல்ல காலமாக, அப்போதுவானத்தில் வானெலி தோன்றி, "வேதச்சைவ நெறித் தலைவரெனும் மூவர்பாடல், வேய்ந்தனபோல் மண் மூடச்செய்தே ஈண்டு வேண்டுவன வைத்தோம்"ஜ1 என்று சொல்லிற்று. வேந்தன் உள்ளம் தெளிந்து உவகைகொண்டான்; எல்லோரும் இன்புற்றனர். பின்னர், அவன் நம்பியாண்டாரைநோக்கி, அவ்வேடுகளே எடுத்து முறைசெய்யுமாறு கேட்டுக்கொண்டான். அவரும் அவ்வாறே பேரூக்கத்துடன் செய்யத் தலைப்பட்டார்.

திருஞான சம்பந்தர் பாடியவற்றுள் முந்நூற்றெண் பத்து நான்கு பதிகங்கள் கிடைத்தன; அவற்றை மூன்று திருமுறையாக வகுத்தார். திருநாவுக்கரசர் பாடியவாகக் கிடைத்த முந்நூற்றெழுபத்து மூன்று பதிகங்களேயும் அடுத்து மூன்று திருமுறையாக வகுத்தார். நம்பியாரூரர் பாடியன எனக் கிடைத்த நூறினையும் ஒரு திருமுறையாகக் கொண்டார். இவ்வகையில் மூவர் முதலிகள் பாடிய திருப்பதிகங்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பெற்றன. பின்னர்த் திருவாதவூரர் அருளிய கோவைத் திருவாசகத்தை எட்டாங் திருமுறையாகவும் திருவிசைப் பாமாலைகளே ஒன்பதாம் திருமுறையாகவும் திருமூலர் அருளிய திரு மந்திரத்தைப் பத்தாங் திருமுறையாகவும் வகுத்தார்கள்.

பின்பு வேந்தன், கம்பியாண்டார் நம்பியை வேண்டி எஞ்சி நின்ற திருமுகப்பாசுர முதலாகவுள்ளவற்றையும் தொகுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டான். அவரும்


{{Reflist} 1. திருமுறைகண். புரா. 22 SIV–28