பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434

சைவ இலக்கிய வரலாறு

அதற்கிசைந்து மகாமந்திரம் ஏழு கோடியாதற் கேற்பத், திருமுறை ஏழேனவும், சீருத்திரம் பதினொன்றாதல் பற்றித் திருமுகப்பாசுர முதலாகியவற்றைப் பதினேராந் திருமுறையாகவும் வகுத்தருளினார்.

திருமுறைவகுப்பு முடிந்தபின் நம்பியாண்டார் நம்பி,தமக்குப் பொல்லாப் பிள்ளையார் அருளியது கொண்டு திருத்தொண்டர் இயல்புகளை அந்தாதியாகத் தொடுத்துத் திருத்தொண்டர் திருவந்தாதி யென்ற பெயரால் ஒரு நூலைச் செய்து உதவினார்.

இறுதியில் திருமுறைகட்குப் பண்ணடைவு வகுக்கவேண்டிய நிலைவந்தது. நம்பியாண்டார் நம்பிகள் திருவெருக்கத்தம் புலியூர்க்குச் சென்று இறைவனைப்பணிந்து வேண்டினார். அப்போது இறைவன் "இவ்வூரில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழியில் தோன்றியிருக்கும் பெண்ணொருத்திக்குப் பண்ணிசை யளித்துள்ளோம், கேட்க"1 என வானொலி தோன்றியருளிற்று. தில்லையம்பலத்தின் திரு முன் அவளைக்கொணர்ந்து நிறுத்திப் பண்ணடைவு செய்க என வேந்தன் முதலாயினர் கேட்க வானத்தில் சொன்னிகழ்ச்சி யுண்டாகவே, அனைவரும் அவளைக்கண்டு தில்லைக்கு அழைத்துவந்து அவளால் பண்ணும் கட்டளையும் வகுத்தனர். திருமுறை வகுப்பின் முடிவில், சோழ வேந்தன் நம்பியாண்டார் நம்பிக்குப் பெரும்பொருள் நல்கிச் சிறப்பித்தான். அந்தப் பெண்ணுக்கும் வேந்தன் தக்க பரிசில் நல்கி மகிழ்வித்தான்.

நம்பியாண்டார் நம்பி வேந்தன் பால் விடைபெற்றுக் கொண்டு திருநாரையூர் அடைந்து திருத்தொண்டர் வரலாறும்திருநெறித்தமிழின் இருப்பும் உணர்த்தியருளிய பொல்லாப் பிள்ளையார்பால் தமக்குண்டான பேரன்பால் திருவிரட்டைமணிமாலை பாடிப்பரவினார். இறைவன் அருளால் ஞானப் பாலுண்டு திருப்பதிகம் பல வழங்கி உதவிய திருஞானசம்பந்தர் திருவடியில் அழுத்தமான அன்புற்று அவர்மேல் பல நூல்களைப் பாடினார். தில்லைப் பெருமான்


1. திருமுறைகண். புரா. 32.