பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436

சைவ இலக்கிய வரலாறு

திருநாரையூர்த் தலபுராணமும் சோழ வேந்தனை, "அபய குலசேகர சோழராசன்"1 என உரைக்கின்றது.

திருமுறை கண்ட புராணம், சோழ வேந்தனை இராச ராசன் என்றும், அபயகுலசேகரன் என்றும் கூறுவது கண்டோர் பலரும், அவன் முதல் இராசராச சோழனவான் என்று கருதி விட்டனர். இதுபற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய திரு T. V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் கூறுவது ஈண்டுக் காணத்தக்கதாகும்.

"திருமுறை கண்ட புராணம் பிற்காலத்தில் எழுதப் பெற்ற ஒரு நூலாகும். அதனை உமாபதி சிவாசாரியார் பாடினார் என்று கூறுகின்றனர்; அதற்குத் தக்க சான்றுகள் இல்லை. அப்புராணத்தில் கூறப்பட்டுள்ள அரசன் பெயரே ஐயத்திற்கு இடந்தருகின்றது. இராசராசன் என்று கூறிய அதன் ஆசிரியர் அதனோடு அமையாமல் அபயகுலசேகரன் என்று பிறிதொரு பெயரும் குறித்துள்ளனர்.

"சோழ மன்னர்களுள் முதற் குலோத்துங்க சோழனுக்கு அபயன் என்ற பெயர் வழங்கியுள்ளது என்பது கலிங்கத்துப்பரணியாலும் 2 அவன் கல்வெட்டுக்களாலும் 3 புலப்படுகின்றது. அவனுக்குப் பிறகு அவன் பெயரன் இரண்டாங் குலோத்துங்கனுக்கும் அப் பெயர் வழங்கி வந்தமை குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழாலும் 4 உலாவினாலும் 5 நன்கு அறியக் கிடக்கின்றது. எனவே, அப் பெயர் முதல் இராசராச சோழனைக் குறிக்கும் என்று கொள்வது எங்ஙனம் பொருந்தும் ? முதல் இராசராசனுக்கோ அபயன் என்ற பெயர் வழங்கவில்லை என்பது கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றது.

"அன்றியும், குலசேகரன் என்னும் பெயர் இதுகாறும் ஆராய்ந்து கண்ட அளவில் சோழ மன்னருள் யாருக்கும்


1. திருநாரை. தலபுரா, 29 : 15.

2. கலிங். பரணி : தா. 2, 4, 12, 16, 42, 82, 88.

3. S. I. I. Vol. VI. No. 1338; T. A. S. Vol. IV. p. 130.9.

4.குலோத். பிள்ளே. 3, 4, 6, 8, 10, 11, 45.

5. குலோத். உலா, 298, 317,