பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 சைவ இலக்கிய வரலாறு

பிள்ளே. இதன்கண், சேந்தனர் பழைய அவிழ் கொடுத் தது, வீரணக்குடி நங்கைக்கு அருள் செய்தது, சுந்தரரும் சேரமான் பெருமாளும் திருக் கயிலாயம் சென்றது." கண்ணப்பர், அதிபத்தர், சாக்கியர் முதலியோர் வர லாற்றுக் குறிப்பு, திருப்புன்கூரில் இறைவன் பன்னிரு வேலி நிலம் பெற்றது ஆகிய செய்திகள் காணப்படு கின்றன. மணிவாசகர் திருக்கோவையார் பாடியதும்,' அவர் காலத்தவனை வரகுணபாண்டியன் சிறப்பும் நம்பி களால் சிறப்பிக்கப் பெறுகின்றன. -

தில்லையம்பலப் பெருமான் மன்றில் நடனம் புரிவது உயிர்கள் பிறப்புத்தோறும் செய்யும் பாவம் அறுத்து ஆள் வதற்கே என்பதும், திருமாலுக்குச் சக்கரமீந்தது அவர் கண்ணிடங் தளித்தமையும் அவரது அன்புடைமையும் அவுணர் செய்யும் துயர் கெடுப்பதும் காரணமாகே நிகழ்ந்தது என்பதும் பிறவும் நம்பிகள் கூறுவன. தம்மைப் பற்றிக் கூறுங்கால், "அவநெறியில் வீழ இருந்த என்னே வாங்கித் தவநெறியிற் புகுவித்தான்' என்றும், தில்லை அம்ப்லவன் திருவடி நீழலே தனக்குத் தலைமறைவு! என்றும்,விதிவசத்தால் தான் கடைப்படு சாதியிற் பிறக் கினும் தனக்கு இறைவன் உள்ளத்தே திருவடியை வைத் தாளுதல் வேண்டும்' என்றும், பிழை பொறுக்காவிடின் பழி இறைவற்கே என்றும் நம்பியாண்டார் கூறுகின்ருர், கீழ்மக்களது நட்பினும் நன்மக்களது பகை நன்று என்பது முதுமொழி ; இதனை நம்பிகள், ! நல்வழி நின்ருர் பகை நன்று நொய்யர் உறவில் என்னும் சொல்வழி

1. கோயில் திருப். 26. 2. கோயில் திருப். 29. 3 62 31. 4. .ை 40. 5. 62 68. 6. ങ്ങു. 54. 7 ഒ്. 58. 8. ഞ്ഞു. 62. 9 ങ്ങ് 3. 10. ങ്ങു. 16. II. டிை 3, 44. 12. ങ്ങ് 9. 13. ങ്ങു. 17. 14. டிை 33-4.