பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்பையர்கோன் நாராயணன்

449

வேம்பூர் போலத் தொண்டை நாட்டு வேம்பில் என்னும் ஊரும் வேம்பை எனப்படுவது பற்றி, தமது ஊரைத் தென் வேம்பை என்பது பெரிதும் இன்பங் தருவ தொன்றாம்.

வேம்பையர் கோனை நாராயணனார் பொருட் பெருக்காலும் வாணிகச் சிறப்பாலும் தமிழ்நாடு முற்றும் நல்ல புகழ் பெற்று விளங்கினார். அவர்க்குப் பாண்டிநாட்டு மதுரையிலும், சோழநாட்டுச் சேய்ஞலூரிலும் நடுநாட்டுப் பெண்ணைக்கரை மணலூரிலும் திருவிதாங்கூர் நாட்டுக் குண்டூரிலும் வாணிகம் நடைபெற்றது. அதுபற்றியே, அவர், “மாடமதுரை மணலூர் மதில் வேம்பை, யோடமர் சேய்ஞலூர் குண்டூர் இந் நீடிய, நற்பதிக்கோன் நாராயணன்”[1] என்று குறிக்கப்படுகின்றார். இவற்றுள் குண்டூர் மாத்திரம் இப்போது கொண்டூர் எனத் திரிந்து வழங்குகிறது.

இவ்வண்ணம். தமிழ்நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் பல விடங்களில் வேம்பையர் கோனது வாணிகம் நடந்த தாயினும், அவரது தலைமை நிலையம்,சோழநாட்டின் பண்டைத் தலைநகராயிருந்த தொன்மைச் சிறப்புடைய உறையூரின்கண் அமைந்திருந்தது. பெருவாணிகத்தால் பெருமை பிறங்கிய அவர்க்கு மகற்பேறு இல்லாத குறைமிக்க மனவருத்தம் பயந்தது. உறையூர்க்கு அண்மையில் நிற்கும் சிராமலைமேல் இருக்கும் சிவபெருமானை அது குறித்து நாளும் பரவிவந்தார். சில நாட்கள் கழிந்த்தும் நாராயணனார்க்கு நன்மக்கள் பிறந்து சிறந்தனர். அவர்க்குச் சிராமலைப் பெருமான் பால் அன்புபெருகி முதிரவே, அவர் உறையூரையே தமக்கு உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்து வருவாராயினர். அவ்வூர்பால் அவர்க்குள்ள அன்பைத் தமது நூலின் முதற்பாட்டில், “உலகமடந்தை துதல் உறந்தைப்பதி, அந்நுதற்குத் திலதம் பரமன் அமரும் சிராமலை” என்று பாடிப் புலப்படுத்தியுள்ளார்.

அவருடைய மக்கள் வளர்ந்து அவர் பேணிச்செய்த


  1. S. I. I. Vol. IV. No. 167: 104.
SIV—29