பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464

சைவ இலக்கிய வரலாறு

விடத்து மகளிரைக் கொல்வது நன்றன்று. திரிபுரத்து அசுரர் பாவிகளாய்ப் பிறர்க்குத் தீங்கு செய்தொழுகினமை கண்டு சிவன், தமது எரியம்பு செலுத்தி அவர்கள் புரத்தையழித்துக் கொன்றது ஒக்கும்; ஆயினும் அவர்களுடைய தேவியர் பெண்களானதால், அவர்களை அந்த அம்பு எரித்தமையின் யாம் அச்சிவபெருமானை நல்லன் என்று சொல்லுதற் கில்லை” என்பாராய்,

“பாவிய ராகப் புரத்திற் பட்டார்பசும் சந்தனத்தின்
நாவிய ராவும் சிராமலை யானையும் நல்லன் என்னாம்
ஓவிய ராலும் எழுதப் படாவுரு வத்தசுரர்
தேவிய ராவியும் கொண்டதன் றோவவர் செஞ்சரமே”[1]

என்று பாடுகின்றார். சிவன் கண் திறந்து நோக்கி மன்மதனை எரித்த காலத்தில், அவன் மனைவியான இரதி போந்து கைகுவித்து நின்று ஓலமிட்டழுதாள்; அப்போது சிவன் அவளைப் பார்த்திருந்தான். ஆனால், கண்ணில் தீப்பிறந்து அவளைச் சுட்டெரிக்கவில்லை, அதற்குக் காரணம் காதலால் உளங் கலந்தவரைப் புணர்க்க யாம் அவர் மீது அம்பு எய்யாம் என்பாயாயின் கணவனை இழந்த மகளிர் எரிமூட்டி அதன் கண் வீழ்ந்து மாள்கின்றது ஏன் என வினவுவார்போல்,

“சரம்கலந் தோரைப் புணர்விக்க எய்யாம்
        என்றாற் கணவன்
நிறம்கலந்து ஓடெரி சேர்கின்ற வாறுஎன்?
        சிராமலையாய்,
இரங்கல் அந்தோ இலையால் வினையேற்கு என்று
        இரதி மண்மேல்
கரம்கலந்து ஓலிடக் கண்ட தன்றோநின்
        கண்மலரே”

என்று வேம்பையர்கோன் கேட்கின்றார். மன்மதனைக் கண்ட கண் அவனை எரித்தழிக்க, இரதியைக் கண்டபோது அது செய்யவில்லையே; ஒருகால் நீ அவள் துயரத்தைக் காணாது போயினையோ என்றொரு நயம் தோன்று


  1. 1. சிராமலை யந். 43.