பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்பையர்கோன் நாராயணன்

465

மாறு “இரதி மண்மேல் கரம் கலந்து ஓலிடக் கண்டதன்றோ நின் கண்மலர்” என்பது அமைந்துளது. பிறிதோரிடத்தில் வேம்பையர்கோன் சிவனுடைய செல்வச்சிறப்பைக் கூறுகின்றார். “நெஞ்சே, சிவபெருமானுக்கு மனைவி கங்கை; இல்லம் தில்லையம்பலம்; அவன் பிறர்பால் சென்று ஏற்பது ஐயம்; அவனது ஊர்தி ஆனேறு” என்று கூறுபவர் பழிப்பதுபோல,

“வேறுகண்டாய் நெஞ்சமே தளரேல்
        விளைமாங்கனியின்
சேறுகண் டார்உண் சிராமலை யாதிதன்
        செல்வம் சொன்னால்
ஆறுகண் டாய்அவன் தேவி, இல் அம்பலம்,
        ஏற்பது ஐயம்,
ஏறுகண்டாய் அவன்ஏறிப் பல்காலம்
        இயங்குவதே”[1]

என்று இசைக்கின்றார். யான் கூறுவது சிவபெருமானைப் பழிப்பதுபோலத் தோன்றினும் பொருள் அவனைப் புகழ்வது என்பார் “நெஞ்சமே, வேறு கண்டாய் தளரேல்” என்ற சொற்கள் குறிக்கின்றன.

முந்துநூற் கருத்துக்கள்

வேம்பையர்கோன் நாராயணனாருடைய பாட்டுக்களைப் படிக்கும்போது முன்னைய நூலோர் கருத்துக்கள் பல நம் நெஞ்சில் எழுகின்றன. “இயங்கிய காலும் நிலனும் எரியும் இருவிசும்பும், மயங்கிய நீரும்”[2] என்பது தொல்காப்பியத்தில் வரும் “நீலந் தீநீர் வளி விசும் போடைந்தும் கலந்த மயக்கம் உலகம்”[3] என்ற நூற்பாவையும், “தொடரிடை யாத்த ஞமலியைப் போலிருந்தேன் இச் சுற்றத்திடரிடை யாப்பவிழ்த்து என்னைப் பணிகொள்”[4] என்பது “தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளீர்”[5] என்ற புறப்பாட்டடிகளையும், “அடியேனுக்கு,


  1. 1. சி. ய. 38.
  2. 2. சி. ய. 58.
  3. 3. தொல்.மரபு. 89.
  4. 4. ௸ 94.
  5. 5. புறம். 74

SIV-30