பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

466

சைவ இலக்கிய வரலாறு

இம்மைப்பொருள் செய்து உதவும் புதல்வரைத் தந்து”[1] என்பது, “தம்பொருள் என்ப தம் மக்கள்”[2] என்ற குறட்பாவையும், “திருமலைத் தத்துவன்தாள் முயங்கிய சிந்தையினார்கள் எந்நாளும் முடிவிலரே”[3] என்பது, “பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் நீடுவாழ்வார்”[4] என்ற குறட்பாவையும் நினைப்பிக்கின்றன. “சிராப்பள்ளிச் சிவனுக்கு அன்பாய் உள்ளலுக்கு நன்று நோற்றதன்றோ என்று உணர்நெஞ்சமே”[5]என்பது, திருஞானசம்பந்தர் பாடிய திருவலஞ்சுழித் திருப்பதிகத்தில், வலஞ்சுழி வாணனைப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனால் “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே”[6] என்ற திருப்பாட்டையும், “முக்கட்சுடரைத் தனிச்செல்வனைப் பணிந்து உள்ளமிர்து ஊறித் தடித்தனமே”[7] என்றது. “சிந்திப்பரியன சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன”[8] என்ற திருநாவுக்கரசரின் அனுபவவுரையையும், “உறைவாய் சிராமலை யுள்ளும் என் சிந்தையினுள்ளும் என்றும், பிறைவாய் மழுவாட் பெரியவனே”[9] என்பது, “சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான்”[10] என்ற திருப்பாட்டையும் உட்கொண்டு இலங்குகின்றன.

அரிய சொல்லாட்சிகள்

மீளப் பிரியாவாறு கலந்த தொன்றைக் கூறுதற்கு இரும்புண்ட நீர் என்றும் சொற்றொடரை எடுத்தோதுவது புறப்பாட்டுக் காலத்திருந்தே வரும் மரபு. “இரும்புண் நீரினும் மீட்டற் கரிது”[11]என வருவது காண்க. அதனைப்


  1. 1. சி.ய. 88.
  2. 2. குறள். 63.
  3. 3. ௸ 41.
  4. 4. ௸ 6.
  5. 5. ௸ 41.
  6. 6. ஞான.சம்.242:1.
  7. 7. ௸ 35.
  8. 8. திருநா. 92:1.
  9. 9. ௸ 29.
  10. 10. திருக்கோவை. 21.
  11. 11. புறம். 21.