பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

சைவ இலக்கிய வரலாறு

முன் நின்றனர். ஞானசம்பந்தப் பிள்ளையார் இனிய அழகிய திருப்பதியத்தால் இறைவனைப் பாடிப் பரவினர். உடனே ஒரு பேரொளி தோன்றி ஒரு வாயிலும் காட்டி நின்றது. யாவரும். அதனுட் சென்றனர். எல்லாரும் சென்ற பின் ஞானசம்பந்தப் பிள்ளையார் மணமகளின் கையைப் பற்றிக்கொண்டு அதனுட் “புக்கு ஒன்றி உடனனானார்.”

வரலாறு பற்றிய வேறு நூற் குறிப்புக்கள்

இதுகாறும் கூறிய இவ்வரலாறு பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர்புராணத்துட் கண்டதாகும். இத் தொண்டர்புராணத்துக்கு முற்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி,

“வையமகிழ யாம்வாழ அமணர் வலிதொலைய
ஐயன்பிரம புரத்தாற் கம்மென் குதலைச்செவ்வாய்
பையமிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல்அருள் பெற்றன. னென்பர் ஞான்சம்பந்தனையே”


“பந்தார்விரலியர் வேள்செங்கட் சோழன் முருகனல்ல
சந்தாரகலத்து நீலநக்கன் பெயர் தான்மொழிந்து
கொந்தார்சடையர் பதிகத்தில் இட்டடியேன்தொடுத்த அந்தாதிகொண்டபிரானருட்காழியார் கொற்றவனே”

என்று குறிக்கின்றது. இத்திருவந்தாதிக்கு முற்பட்டதான திருத்தொண்டத்தொகை,

“வம்பறான வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்”

என்று கூறுகிறது. இனி, சேக்கிழார்க்குக் காலத்தால் முற்பட்டவரும், நம்பியாண்டார் நம்பிக்குப் பிற்பட்டவருமான ஒட்டக்கூத்தர் தாம் பாடிய தக்கயாகப்பரணியில், திரு ஞானசம்பந்தர் வரலாற்றைச்[1] சிறிது கூறியுள்ளார். அதன்கண் திருஞானசம்பந்தர் மதுரைக்குச் சென்றதும்,


  1. 1. தக்கயாகப்பரணி 6. தாழிசை 17-220.