பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

47

அவர் தங்கியிருந்த மடத்தில் அமணர் தீ வைத்ததும், பாண்டி வேந்தன் வெப்புற்றதும், அவ்வெப்பு நீங்க அமணர் மந்திர தந்திரங்களால் முயன்றும் மாட்டாராயினதும், பாண்டியன் ஆற்றானாய் மூர்ச்சித்ததும், அது கண்டு குலச்சிறையார் ஞானசம்பந்தரை யடைந்து வேண்டுவதும், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வேண்டிக் கொள்வதும், ஞானசம்பந்தர் வந்து அரசனருகே வீற்றிருப்பதும், அமணர் கண்டு வெகுளுவதும், குலச்சிறையார் அமணர்களை யடக்கி ஞானசம்பந்தரை வேண்டுவதும், ஞானசம்பந்தர் திருநீறிடுவதும், இட்ட வளவே, வேந்தன் வெப்பு நீங்கி யெழுந்து அவரைப் பணி வதும், அமணர் வேந்தனைத் தடுப்பதும், வேந்தன் அவர்களை நோக்கி, “கெடுவீர் கெடுவீர் இவை சொல்லுவதே, கெட்டேனடிகள் இவர் கேவலரோ, விடுவீர் விடுவீர் இனி என் எதிர் நீர், வெங்கோபமும் உங்கள் விவாதமுமே”[1]என்று தெழிப்பதும், பின்னர் அந்த அமணர்கள் அனல் வாதமும் புனல் வாதமும் புரிவோமென மேற்கொள்வதும், சமயப் போர் செய்தல் வேண்டாவென மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரைப் பணிந்து தடுப்பதும், ஞானசம்பந்தர் அவரைத் தேற்றி அனல் வாத புனல் வாதங்கட்கு உடன்பட்டுச் செல்வதும், வாதங்கள் நிகழ அமணர் தோற்பதும், ஞானசம்பந்தர் பாண்டியனை நோக்கி, “வாராய் இவர் ஆகம துல்லபமும், வருமெங்கள் சிவாகம வல்லபமும், பாராய் வழுதியிது பாருருவத், திருவிக்ரமமின்றுபடும்படியே”[2] எனச் சொல்லிக் காட்டுவதும், முடிவில் அமணர் கழுவேறியதும், அது கண்டு ஞானசம்பந்தர் விலக்கியதும், அவருக்கு மாகேசுரக் கணபதித் தொண்டர்கள், “மண்ணாவுடம்பு தங்குருதி, மண்ணக் கழுவின் மிசை வைத்தார், எண்ணாயிரவர்க்கெளியரோ, நாற்பத்தெண்ணியிரவரே”[3] 3 என்று அமைதி கூறுவதும் இவ் வரலாற்றில் அடங்கியுள்ளன.



.


  1. தக்கயாகப்பரணி. தா. 199.
  2. தக்கயாகப்பரணி. தா. 215.
  3. தக்கயாகப்பரணி. தா. 219.