பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

49

குறிக்கப்பெற்றிருக்கும் சண்டேசுரனர். கண்ணப்பர், நமிநந்தியடிகள், கோச்செங்கட்சோழன் முருகநாயனார், சிறுத் தொண்டர், திருநீலநக்கர், பாண்டிமாதேவியாரான மங்கை யர்க்கரசியார், குலச்சிறையார், திருநீலகண்டயாழ்ப்பாணர், தண்டியடிகள், புகழ்த்துணையார் என்ற பன்னிருவருள், மேலே கூறிய திருநீலநக்கர் முதலிய எழுவர் நீங்கலாக எஞ்சும் ஐந்து பேர்களும் திருஞானசம்பந்தர்க்குக் காலத்தால் முற்பட்டோராவர். அவருள் சண்டீசரை,

“வந்த மணலால் இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்
சிந்தைசெய்வோன்தன்கருமம் தேர்ந்துசிதைப்பான் வருமத்
தந்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே”[1]

என்றும், கோச்செங்கணானை, “செம்பியன் கோச்செங்கணான் செய்கோயில்”[2]என்றும், கண்ணப்பரை, “வாய் கலசமாக வழிபாடுசெயும் வேடன் மலராகும் நயனம், காய்கணையினால் இடந்து ஈசனடி கூடுகாளத்திமலையே”[3] என்றும், “கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள் அண்ணல் ஆரூராதி யானைக்காவே”[4] என்றும் நமிநந்தியடிகளை, “ஆவிதனில் அஞ்சொடுக்கி அங்கணனென்று ஆதரிக்கும், நாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்”[5] என்றும், புகழ்த்துணையாரை “அலந்த அடியான் அற்றைக் கன்று ஒர் காசெய்திப், புலர்ந்த காலைமாலை போற்றும்புத்தூரே”[6] என்றும், தண்டியடிகளை, “அண்டர் தொழு தண்டி பணிகண்டு அடிமை கொண்ட இறை”[7]என்றும் குறித்துள்ளார்.

தமது காலத்தில் வாழ்ந்தவர்களுள், திருநீலநக்கரை, நிறையினர் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர்


  1. ஞானசம், 62:4.
  2. ஞானசம். 276:4.
  3. ஞானசம். 327:4
  4. ஞானசம். 367:7
  5. ஞானசம். 62:6
  6. ஞானசம். 199:7
  7. ஞானசம். 326:10

SIV 4