பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

53

டர் வடபுலஞ் சென்றபோதுஇருந்த வேந்தன் வாதாபி கொண்ட நரசிங்கவன்மனத் தவிர வேறே யாவனாதல் கூடும்? ஆகவே, திருஞானசம்பந்தர் காலத்திருந்த சிறுத்தொண்டர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த நரசிங்கவன்மனோடு உடனிருந்தவராவர். சிறுத்தொண்டர் வேண்டவே, தாம் பாடுவதாக ஞானசம்பந்தர் செங்காட்டங்குடித் திருப்பதிகத்திற்[1]கூறுகின்றார். ஆகவே, திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூன்பாண்டியனைச் சைவனாக்கித் தென்பாண்டியில் சிவ நெறி நிறுவிய பெருந்தகையாவர் என்பது துணிபு.[2]

இனி, பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்குப் பின்னர், தஞ்சை ராவ்சாகிபு. திரு. K.S.சீனிவாச பிள்ளையவர்கள் ஞானசம்பந்தர் காலத்தைப் பற்றித் தாம் எழுதிய தமிழ் வரலாற்றிற் பிற்காணுமாறு கூறுகின்றார்:[3] சீகாழியில் கெளனிய கோத்திரத்தினராய்ச் சிவபாத இருதயர் என்பார்க்குத் தவப்பயனாய் அவர் மனைவி பகவதியார் வயிற்றில் சம்பந்தமூர்த்தியடிகள் அவதரித்தனர், அவர்க்கு மூன்றாம் ஆண்டில் பொன்வள்ளத்துப் பாலூட்டிய கதையையாவரும்அறிவர்.

மூன்றாம் ஆண்டு என்பது எது? நிறைவுற்ற ஆண்டைக் குறிப்பிடுவதே நம்மனோர் வழக்கம். நடைபெறும் ஆண்டைக் குறிப்பிடுவதில்லை. ஆதலால் பிள்ளையார்க்கு இச்சம்பவம் நிகழ்ந்த காலத்து நடைபெற்றது நான்காம் ஆண்டாம். உடனே பிள்ளையார் தலயாத்திரை செய்யத் துவக்கினர் தில்லை, முதுகுன்றம், பழுவை முதலிய பல தலங்களுக்குச் சென்று பதிகம் பாடிச் சீகாழி


  1. “செங்காட்டங் குடிமேய
    வெந்த நீறணி மார்பன் சிறுத்தொண்டனவன் வேண்ட
    அந்தண் பூங்கலிக் காழி யடிகளையே யடிபரவும்
    சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே”
    —ஞான. 321:11
  2. Tam. Ant. No. III. p. 63-5.
  3. தமிழ் வரலாறு. பக்.58.64