பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

55

பெயரை வைத்துப் பாடினர். அவை,

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டங் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணி செய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே”

[1]

செந்தண்பூம் புனல் பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்த நீறணி மார்பன் சிறுத் தொண்டனவன் வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே”

[2]

என்பன.

“ஈண்டுச் சிறுத்தொண்ட அடிகள் வரலாற்றைச் சற்று ஆராய்வோம். சிறுத்தொண்டரென்பது காரணப்பெயர். அவரது இயற்பெயர் பரஞ்சோதியார். இவர் காஞ்சியில் பல்லவ அரசன் நரசிம்மவர்மனிடத்திற் சேனாதிபதியாயிருந்தனர். பல்லவர்களுக்கும் துங்கபத்திரை நதிக்கு வடபாலுள்ள குந்தள நாட்டரசர்களாகிய சளுக்கியர்களுக்கும் ஓவாது போர் நடப்பது வழக்கம். நரசிம்மவர்மன் காலத்திருந்த சளுக்கிய அரசன் இரண்டாவது புலிகேசி யென்பான். அவன் மிக்க பராக்கிரமசாலி. அநேக அரசர்களைப் போரில் வென்று அவர்கள் நாடுகளைக் கீழ்ப் படுத்தினான். அக்காலத்தில் ஹர்ஷவர்த்தனன் என்னும் கன்னோசி நாட்டரசன் ஒருவன் இருந்தனன். அவன் நருமதையாறு தொடங்கி ஹிமயமலை வரையிலுள்ள நாடுகளையும் அவற்றிற்குக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நாடுகளையும் போர்புரிந்து தனக்குக் கீழாக்கினன்; பெருங்கீர்த்தி பெற்ற பராக்கிரமசாலி. அவன் குந்தள நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது புலிகேசி II என்னும் குந்தளநாட்டரசன் அவனை முறியடித்தான். பாரத வருஷத்திலிருந்த அரசர்களில் ஹர்ஷவர்த்தனனை வென்றவன் புலிகேசி II ஒருவனே யென்றால் அவன் பராக்கிரமத்தின் அளவு எத்துணையதாம்! இவனது தலலநகர் வாதாபி. யுவான் சுவாங் என்னும் பிரசித்தி பெற்ற சீன தேசயாத்-


  1. ஞானசம். 321 : I
  2. ஞானசம். 321: II