பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சைவ இலக்கிய வரலாறு

திருமுறைகண்ட காலத்துத் திருஞானசம்பந்தர் பாடியனவெனக் காணப்பட்ட முந்நூற்றெண்பத்து நான்கு திருப்பதியங்களுள் ஒரு திருப்பதிகம் அவை முதன்முதல் அச்சேறிய காலத்தில் கிடைக்காது போயிற்று. எஞ்சிய முந்நூற்றெண்பத்துமூன்று திருப்பதியங்களே அச்சாகி வெளிவந்தன.

இப்பதியங்கள் தொடக்கத்தில் பண்முறையில் அறிஞர்களால் அச்சேற்றி வெளிப்படுத்தப்பட்டன. இவை திருமுறை திருமுறைகளாக வகுக்கப்பட்டதும் பண்முறை பற்றியேயென்பது திருமுறைகண்ட புராணத்தால் தெரிகிறது. திருஞானசம்பந்தர் திருப்பதியங்கள் முதன்மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. முதல் திருமுறையில், கட்டபாடை முதல் மேகராகக் குறிஞ்சியீறாகப் பண் ஏழும் பண்ணமைதி பெறாத யாழ்மூரியுமாகப் பண் எட்டிற்குத் திருப்பதியம் நூற்றுமுப்பத்தாறும், இரண்டாம் திருமுறையில் இந்தளம் முதல் செவ்வழியீறாகப் பண் ஆறுக்குத் திருப்பதியம் நூற்றியிருபத்திரண்டும், முன்றாந் திருமுறையில் காந்தார பஞ்சமம் முதல் அந்தாளிக் குறிஞ்சியீறாகப் பண் ஒன்பதுக்குத் திருப்பதியம் நூற்றியிருபத்தைந்தும் ஆக முந்நூற்றெண்பத்து மூன்று பதிகங்களாகின்றன.

கல்வெட்டாராய்ச்சியாளரால் திருவிடைவாய் என்னுமூர்க் கல்வெட்டொன்றில்[1] திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகம் காணப்பட்டது. அப்பதிகம் ஏனைப் பதியங்களோடு சேர்த்து இப்போது அச்சாகும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் வெளியிடப்பட்டுளது, அது பண் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திருவிடைவாய்த் திருப்பதிகம் கல்லில் வெட்டப்பட்டபோது. அதற்கென்று வகுக்கப்பட்டிருந்த பண்ணின் பெயர் விடுபட்டதாகக் கொள்ளின், திருமுறைகண்டபுராணமுடையார் கூறும் முந்நூற்றெண் பத்துநான்கென்னும் தொகை நிறைந்து விடுகிறது.

இனி, யாழ்.மூரிப்பதிகம் பண்ணமைதிபெறாததென்றும்,


  1. Annual Report, Madras Epigraphy No. 8 of 1918.