பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

சைவ இலக்கிய வரலாறு

கிடைத்துள்ளனகொண்டு[1] பொதுவாகவுள்ள ஏழு திருப்பதிகங்களையும் கழித்து நோக்குமிடத்துத் திருஞானசம்பந்தர், திருப்பதிகங்களால் வழிபட்ட திருப்பதிகள் இருநூற்று இருபதாகின்றன. இவற்றில் சீர்காழிக்குமட்டில் அறுபத்தேழு பதிகங்கள் உண்டு. திருவீழிமிழலைக்குப் பதினான்கு பதிகங்களும், மதுரைக்கு ஒன்பது பதிகங்களும், திருமுது குன்றத்துக்கு ஏழு பதிகங்களும், திருவிடைமருதுார்க்கு ஆறு பதிகங்களும் உள்ளன. திருவாரூர், திருவையாறு, திருக்கச்சி, திருமறைக்காடு என்ற ஊர்கட்கு ஐந்து திருப்பதிகங்களும், திருநள்ளாற்றுக்கு நான்கு திருப்பதிகங்களும், திருஅம்பர்மாகாளம், திருவானைக்கா, திருச்சிவபுரம் திருநல்லூர், திருநறையூர்ச் சித்தீச்சுரம், திரு நாரையூர் திருமழபாடி, திருவலஞ்சுழி என்ற இவற்றிற்கு மூன்று திருப்பதிகங்களும், திருவான்மியூர், திருவாழ் கொளிப்த்துர்திருவலிவலம் திருமாற்பேறு, திருமருகல், திருவண்ணுமலை, திருவாமாத்துர், கோட்டாறு, திருக்கோயில் (சிதம்பரம்), திருச்செங்காட்டங்குடி, திருத்தேவூர், திருநாகேச்சுரம், திருநாகைக்காரோணம், திருப்புகலூர், திருப்பூவணம் என்ற ஊர்கட்குத் தனித்தனி இரண்டு பதிகங்களும், ஏனைய ஊர்கட்கெல்லாம் ஒவ்வொரு திருப்பதிகமும் காணப்படுகின்றன.

திருஞானசம்பந்தர் செய்த தல யாத்திரை

திருஞானசம்பந்தர் வரலாற்றில் அவர் சீர்காழியின் நீங்கி ஆறு முறை திருக்கோயில் வழிபாடு குறித்து


  1. பொதுவாகவுள்ளவை:
    அவ்வினைக்கிவ்வினை காதலாகி,
    ஆரூர் தில்லை. கல்லானீழல்.
    வேயுறுதோளி. வாழ்க.
    துஞ்சலுந்.