பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

65

“யாத்திரை” செய்துள்ளார். அக்காலை அவர் வழிபட்ட கோயில்கள் வருமாறு:

முதல் யாத்திரை, திருப்பிரமபுரம் முதல் மூன்று; இரண்டாவது யாத்திரை, திருநனிபள்ளி முதல் ஏழு; மூன்றாவது யாத்திரை, திருமயேந்திரப்பள்ளி முதல் நான்கு; நான்காவது யாத்திரை, சிதம்பரம் முதல் இருபத்திரண்டு; ஐந்தாவது யாத்திரை, திருக்கண்ணுர் கோயில் முதல் நூற்று எழுபத்தெட்டு; ஆறாவது யாத்திரை, சிதம்பரம் முதல் நாற்பத்தேழு; இறுதியாகிய ஏழாவது யாத்திரை, திருநல்லூர்ப் பெருமணத்தோடு முற்றுப்பெற்றது.

சேக்கிழார் கூறிய திருஞானசம்பந்தர் வரலாற்றிற் கண்ட திருக்கோயில்கள் மேலே கூறியனவாகும். இவற்றுள் ஒரு முறைக்கு மேல் இருமுறை மும்முறையாக வழிபடப்பட்ட கோயில்களைக் கழித்து நோக்கின், திருஞான சம்பந்தரால் திருப்பதிகம்பாடி வழிபடப்பட்ட கோயில்கள், திருவிடையாய் உளப்பட இருநூற்று நாற்பத்தொரு கோயில்களாகும். எஞ்சி நிற்கும் முப்பத்துமூன்று கோயில்கட்குத் திருப்பதிகம் காணப்படவில்லை. அவை மாறன்பாடி, திருநீடூர், திருமண்ணிப்படிக்கரை, திருக்குறுக்கைவீரட்டம், திருவெதிர்கொள்பாடி, திருக்கஞ்சனூர், திருவெஞ்சமாக்கூடல், திருவாட்போக்கி (இரத்தினகிரி) திருவாலந்துறை, திருச்செந்துறை, திருத்தவத்துறை, திருவெறும்பியூர், திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி, திருப்பாலைத்துறை, திருப்பூவனூர், திருவாறைமேற்றளி, திருச்சத்திமுற்றம், திருவாறைவடதளி, திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருமூவலூர், திருவாரூர் அரநெறி, திருத்தலையாலங்காடு, திருச்சாத்தங்குடி, திருக்கோடிக்குழகர் கோயில், திருச்சுழியல், திருமணமேற்குடி, திருப்போதிமங்கை, திருத்தினைநகர், திருக்கச்சி அநேகதங்காவதம், திருக்கச்சிமேற்றளி, திருவெண்பாக்கம், திருக்காரிகரை என்பனவாகும்.

திருப்பதிகத்தால் வழிபடப் பெற்ற கோயில்களுள் இராமனதிச்சுரம், திருவேடகம், திருக்கடைமுடி, திருக்கற்குடி, திருக்கலிக்காமூர், திருக்கள்ளில், திருக்கோட்டாறு,

Siv-5.