பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

திருஞானசம்பந்தர்

 புகில் அளவில்லைகிளக்கவேண்டா, கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை, தாட்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க தக்கார்"1 என அவர்கூறுவது ஈண்டு நோக்கத் தகுவதாம். சுருங்கச்சொன்னல், ஒவ்வொருவரும் தாந்தாம் செய்த பிழைக்கு வருந்தி மனம் திருந்தி வழிபடல் வேண்டும் வழிபடுவோர்க்கு அவர் அருள் செய்வார் என்பாராய், "தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே, ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்"2 என்றும் அறிவுறுத்துகின்றார், இறைவனுடைய திருப்பெயர்களும் பல. அவன் உயிர்களை ஆட்கொள்ளற்குக் கொள்ளும் திருவுருவும் பல. "நானாவித வுருவால் நமை ஆள்வான்"3 என அவர் கூறு வது காண்க. அதனால், அவனுடைய பெயரும் உருவும் இதுவென வரையறுத்தோதுதல் அருமையாம்; ஆயினும் அவனது உரு நீதி யெனல் அமையும் என்பாராய், "இன்னவுரு இன்னநிறம் என்று அறிவதேல் அரிது, நீதி பலவும், தன்னவுருவாம் என மிகுத்த தவன்"4 என்று விளக்குகின்றார். உயிர்களின் இயல்பு - இவ்வாறு, கடவுட் கொள்கை நலங்களை ஆங்காங்குக் குறித்துச்செல்லும் திருஞானசம்பந்தர், தாம் மேற்கொண்டுள்ள சில அரிய கொள்கைகளையும் நாம் அறியக் குறித்துள்ளார். உலகில் வாழும் மக்களுடைய நெஞ்சம் பலவகை யான நினைப்புக்கட்கு உறைவிடம். நெஞ்சம் புண்ணாமாறு நெடிது நினைந்து வருந்தித் துஞ்சுவது மாந்தர் தொழிலாகும். ஆகவே, நெஞ்சத்தை நினைப்புக்கட்கு இரையாக்காது, ஒரு நெறியில் நிறுத்தி வாழ்வது இன்றியமையாது என்பார், "நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின்று அயராதே, மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம் வந்து அடையாமை"5 என்று குறிக்கின்றார். மேலும் பிறப்புத் _______________________________

1. ஞானசம். 312 : 4.
2. ஞானசம். 200 : 1.
3. ஷ. 9 : 5. 
4. ஷ. 329 : 4.
5. ஷ .118: 8.