பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சைவ இலக்கிய வரலாறு

துன்ப வடிவினது:பிறந்தவர் துன்ப நீக்கமே வேண்டற்பாலர். அது துறவு மேற்கொண்டவர்க்கே எளிதில் கை கூடப்பெறுவது என்ற கொள்கை நாட்டில் அந்நாளில் நன்கு பரவி யிருந்தது. அதுகண்ட ஞானசம்பந்தர். "துறவும் ஒரு நன்னெறியே ஆயினும், அதனினும் எளியதும் நலந்தருவதுமாகிய திருநெறியொன்று உண்டு : அஃது. இறைவனை நாளும் இடையறாது வழிபட்டு வாழ்வது என்று ஞானசம்பந்தர் தெருட்டுவாராய்," பிறவியால் வருவன கேடுள.ஆதலால் பெரிய இன்பத், துறவியார்க்கல்லது துன்பம்நீங்காதுஎனத்தூங்கினாயே,மறவல்நீமார்க்கமே நண்ணினாய், தீர்த்தநீர்மல்குசென்னி, அறவன் ஆரூர் தொழுது உய்யலாம்மையல்கொண்டு அஞ்சல்நெஞ்சே"[1] என்று கூறுகின்றார், "காமஞ்சான்ற கடைக்கோட்காலை, ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி"[2] அறம் புரிந்த நல்லோர்க்கே துறவு நன்கு கைகூடப் பெறுவதெனத் தொல்காப்பியரும், "ஓடி உய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே"[3] எனச் சங்கச் சான்றோரொருவரும் கூற, வழிவழியாக வந்த அப்பழந்தமிழ்க் கொள்கையை உடன்பட்டு, பெண்டிர் மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை, விண்டு பண்டே வாழமாட்டேன்"[4] என்று உரைக் கின்றார். இவ்வாறு துறவுபற்றிக் கூறினராயினும், துறவு பூண்டுவாழும் பெரியோர்களைப்பாராட்டி, "ஐம்புலன்கள் செற்று மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம் புரியும் முதுகுன்றமே "[5] எனவும், "அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்கோயில்"[6] எனவும் கூறுவது குறிக்கத்தக்கது.

<bஅறவுரை வழங்கல்b/>

இனி, தாம் வற்புறுத்தும் வழிபாட்டையும் ஒருமையுணர்


  1. ஞானசம். 215 : 5.
  2. தொல். பொ. கற்பு. 51.
  3. புறம்: 193.
  4. ஞானசம். 50 : 3.
  5. ௸. 131 : 10,
  6. ௸ 132 : 6.