பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

திருஞானசம்பந்தர்



வோடு உலகியற் சிற்றின்பத்தை உள்ளங்கொள்ளாது செய்தல் வேண்டுமென்பாராய், "செப்ப நெஞ்சே நெறி கொள்: சிற்றின்பம், துய்ப்பன் என்னாது அருளே துணையாக"1என்றும், "பத்திப்பேர் வித்திட்டே பரந்த ஐம் புலன்கள்வாய்ப் பாலே போகாமே காவாப் பகையறு வகை நினையா”2 என்றும் கூறுவர். வாழ்க்கையின் பயன் இறைவன் திருவடியை வழிபட்டு வாழ்வதே எனவும், அதனைக் காலையும் மாலையும் செய்வது மக்கட்குக் கடன் எனவும் வற்புறுத்துகின்றார். '. வையத்தில் நன்னெறிக்கண் வாழ்வார்க்கும், வாழ்க்கையின் இயல்பாகிய துன்பப்பயன் இல்லாதுபோதல் இல்லை. இப்பிறவித்துன்பமும், தம்மாலும் பிறவுயிர்களாலும் வருமாயின் அதனை ஒரளவு முன்னறிந்து காத்தல் மக்கட்கு. இயலுவதொன்று நாள் கோள் முதலிய தெய்வத்தால் வருவன அவ்வாறு காக்கப்படுவன அல்ல; ஆயினும், ஒருமை வழிபாடுடையார்க்கு அவையும் இல்லாதொழியும் எனத் திருஞானசம்பந்தர் தெருட்டலுற்று, "ஆதிப்பிரான் அடிகள் அடைந்தேத்தவே கோளும் நாளவை போயறும் "3'எனவும், '"நாதன் அமர்கின்ற நாகேச்சுரம். நண்ணுவார், கோளும் நாளுங் தீயவேனும் நன்காம் குறிக் கொண்மினே"4எனவும் ஊக்குகின்றார். ஒரு நெறிய மனம் வைத்து ஆண்டவனே வழிபடுவதை, மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு இம்மைப் பயன்களேயன்றி. வீடுபேற்றுக்கு இன்றியமையாத திருவருள் ஞானமும் அவனால் நல்கப்படும்"5 என்றும், அவன் ஞானமே வடிவாக, உடையவன்6 என்றும் அறிவுறுத்தியுள்ளார். வழிபடு வோர்க்கு அவன் இம்மைப் பயன்களை நல்குவனென்பதை, "சங்கரனர் தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவர்"7எனவும், மண்ணில் நல்லவண்ணம். ______________________________

1. ஞான.சம். 28: 1.
2. ஷ 126:7
3. ஷ 146 : 7.
4. ஷ.255 : 6.
5. ஷ. 21 : 6; 17:6
6. ஷ.69 3.
7  ஷ 238 : 2.