பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:78

"78 சைவ இலக்கிய வரலாறு

குறித்துள்ளார். திருவானைக்காவில் ஆனை வழிபட்டதும்1 திருவெண்காட்டில் வெள்ளை யானை வழிபட்டதும்,2 மயேந்திரப்பள்ளியில் ஞாயிறும் திங்களும் வழிபட்டதும்3, பிற -வும் அவரால் குறிக்கப்படுவனவாகும்.

விலங்குகளேயன்றி வேந்தருட் பலரும் தேவர்களும் இறைவனை வழிபட்டுப் பேறுபெற்ற செய்திகள் பல ஞானசம்பந்தரால் கூறப்படுகின்றன. சீகாழியிலும் பிறவிடங்களிலும் பிரமன் வழிபட்ட செய்தியும்4, திருக்கண் ணர் கோயிலில் இந்திரன் வழிபட்டதும்5, சீகாழி வெள் ளத்தில் மிதந்தோங்கிய செய்தியும்6, கண்ணன் மலையைக் குடையாகத் தாங்கிய செய்தியும்7, பகீரதன் கங்கையைக் கொணர்ந்தசெய்தியும்8, நளன் திருநள்ளாற்றில்வழிபட்ட செய்தியும்9 நந்தன் என்பான் சீகாழியில் இருந்து அரசாண்ட செய்தியும்10, திருப்பாதிரிப்புலியூரில் முடக்கான் முயலகன் அருள் பெற்றதும்11, கோச்செங்கட்சோழனது முன்னைப்பிறப்புவரலாறும்12, அவன் திருவானைக்கா13, திரு வம்பர்14, திருவைகா15, திருத்தண்டலை நீணெறி16, திருமூக்கீச்சுரம்17' என்ற இடங்களில் திருப்பணி செய்ததும், இவ்வாறே தமிழ் வேந்தர் மூவரும், திருப்பூவணம்18,திருமூக்கிச் சுரம்19' முதலிய இடங்களில் பணி செய்து வழிபட்ட செய்தியும், திருவாலங்காட்டுப் பழையனுரர் நீலி கதையும்20, இறைவன் ஆலின் கீழிருந்து அறமுரைத்த வரலாறும்21, இறைவன் கூடலில் தமிழ் ஆய்ந்ததும்,22 விருத்த-


1.ஞான159:4. 2.ஞான.284:7.

3.ஷ. 289 :6. 4。 ஷ.1 : 11.
5 ஷ. 101 :7. 6. ஷ 75 : 2. 
7 ஷ. 79 : 9. 8. 6; 327 : 6. 
9. ஷ.I69 :3. 10. ஷ. 63: I 11 .ஷ.257 :1. 12. ஷ.199 : 7. 13 ஷ. 159 :5. 14. ஷ.277 : 5. 15 ஷ .276: 4. 16. ஷ.308 : 9. 17 .ஷ.378 :6. 18. ஷ 64 : 1. 19. ஷ256 : 9. 20. ஷ 45 : 1. 21. ஷ.337 :3, 22. ஷ.312: 11.