பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ix

இந்த அளவிலேனும் இவ்வரலாறு வெளிவருவது நன்றெனத் தேர்ந்து அழகிய முறையில் செவ்வையாக அச்சிட்டுத் தமிழ் உலகிற்கு அளிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் உயரிய தமிழ்ப் பணியைப் பாராட்டி, அதற்கு நம் இனிய தமிழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனிய, அழகிய அணிந்துரை தந்து இந்நூலைச் சிறப்பித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் உயர்திரு. டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., அவர்கட்கு என் மனமார்ந்த நன்றியைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை நன்கு அச்சிட்டு அளிக்கும் சென்னை ஸ்ரீ ராமபிரசாத் அச்சகத்தாரின் தொழிற்றிறம் யாவரும் பாராட்டற்குரியதொன்று.

தில்லைப் பொன்னம்பலத்தும், மதுரை வெள்ளியம்பலத்தும் திருக்கூத்து இயற்றும் பெருமான், என்னையும் இத்துறையில் இயக்கிப் பணிகொண்ட பேரருளை நினைந்து, அவன் திருவடிகளைப் பரவுகின்றேன்.

“ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே”


“அவ்வை” காந்தி நகர்,
ஔவை. சு. துரைசாமி
மதுரை, 7-4-58